தமிழ்நாட்டில் நாய்களை வளர்ப்பதற்கு புதிய கொள்கைகளை (Tamil Nadu State Dog Breeding Policy) வகுத்து கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி அரசாணை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு வெளியிட்ட நாய் வளர்ப்புக் கொள்கையைப் பின்பற்றி இவை வடிவமைக்கப்பட்டதாக, மாநில அரசின் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அதன்படி, ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, கட்டை, ராமநாதபுரம் மண்டை நாய், மலைப்பட்டி, செங்கோட்டை நாய் ஆகியவற்றுக்கு நாட்டு நாய் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.மாநில அரசின் நாய் வளர்ப்புக் கொள்கை பட்டியலில், தமிழ்நாட்டின் தட்பவெப்பச் சூழலுக்கு ஒத்துவராத கீழ்கண்ட 11 வகை வெளிநாட்டு நாய் இனங்களை வீட்டில் வளர்ப்பதற்கும், இனப்பெருக்கம் செய்து விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது:
- பிரெஞ்ச் புல்டாக் (French Bulldog)
- பாசெட் ஹவுண்ட் (Basset Hound)
- அலாஸ்கன் மலாமுட் (Alaskan Malamute)
- கீஷாண்ட் (Keeshond)
- சோ சோ (Chow Chow)
- நியூ ஃபவுண்லான்ட் (Newfoundland)
- நார்வேஜியன் எல்கவுண்ட் (Norwegian Elkhound)
- திபெத்தியன் மாஸ்டிஃப் (Tibetan Mastiff)
- சைபீரியன் ஹஸ்கி (Siberian Husky)
- செயின்ட் பெர்னார்ட் (Saint Bernard)
- பக் (Pug)
- இந்தப் புதிய கொள்கையின்படி, வீடுகளில் நாய் வளர்ப்பவர்கள் உள்ளாட்சி அமைப்புகளிலும், இனப்பெருக்கம் செய்து விற்பவர்கள் விலங்குகள் நல வாரியம் அல்லது கால்நடை பராமரிப்புத் துறையில் அனுமதி பெற வேண்டும்.
