எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்துடன் அவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் பயணிக்க இருப்பதால் இதுவே அவரது கடைசி படமாக பார்க்கப்படுகிறது. பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இப்படத்தில் ஹிந்தி நடிகர் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், நரைன், மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் இன்று (அக்.,4) இப்படத்தின் பூஜை சென்னையில் நடந்துள்ளது. இதில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, நடிகர்கள் பாபி தியோல், நரைன், இயக்குனர் எச்.வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
