20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் 4-ஆவது போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் இன்று(அக். 4) பலப்பரீட்சை நடத்தின. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்கள் திரட்டியது.இதையடுத்து இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது. இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
