2024ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்டர் அம்ப்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. “மைக்ரோஆர்என்ஏவின் கண்டுபிடிப்பு மற்றும் பிந்தைய டிரான்ஸ்கிரிப்ஷனல் மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கு” கண்டுபிடித்ததற்காக 2 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் மருத்துவத்துக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது.
