ஹாக்கி இந்தியா லீக் போட்டி 2024

Spread the love

ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்ஐ) சார்பில் ஐபிஎல் போட்டி பாணியில் ஹாக்கி இந்தியா லீக் (எச்ஐஎல்) போட்டி கடந்த 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கடைசியாக 2017-ல் நடைபெற்ற எச்ஐஎல் போட்டியில் கலிங்கா அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின்னர் 6 ஆண்டுகளாக இந்த தொடர் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது 7 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் எச்ஐஎல் போட்டி நடைபெறவுள்ளது. இம்முறை ஆடவர் பிரிவில் 8 அணிகள் களமிறங்குகின்றன அதன் விபரம்

OwnerTeam
Charles GroupChennai men’s team
Yadu SportsUP Rudras
JSW SportsPunjab men
Shrachi SportsWest Bengal men & women
SG SportsDelhi men & women
VedantaOdisha men
Resolute SportsHyderabad men
NovayomRanchi men & Odisha women

தவிர, முதன்முறையாக மகளிருக்கான எச்ஐஎல் தொடரும் நடத்தப் படுகிறது. போட்டியில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்ய ஏலம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இன்றும் வீரர்களுக்கான ஏலம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.ஹாக்கி இந்தியா லீக் தொடரின் ஆறாவது சீசன், வரும் டிசம்பர் 28-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி வரை. ராஞ்சி, ரூர்கேலாவில் நடைபெறும். மகளிர் இறுதிப் போட்டி ஜனவரி 26-ம் தேதி ராஞ்சியில் நடைபெறும் ஆடவர் ஹாக்கி போட்டி இறுதிச் சுற்று பிப்ரவரி 1-ம் தேதி ரூர்கேலாவில் நடைபெறும். இந்நிலையில் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஏலம் நேற்று டெல்லியில் தொடங்கியது.வீரர்களுக்கான ஏலத்தில் இந்திய உள்ளூர் வீரர்கள் 400 பேர் பதிவு செய்திருந்தனர். மேலும் 150-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். மகளிர் பிரிவில் 250 உள்ளூர், 70க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீராங்கனைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *