இ-காமர்ஸ் தளங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டன. இன்றெல்லாம் பெரும்பாலானோர் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை ஆன்லைனில் தான் ஆர்டர் செய்கின்றனர். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது தங்களுடைய அளவு மற்றும் ஏதாவது ஒரு பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். ஆடைகள் மற்றும் இதர பொருட்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய இந்த தளங்கள் மக்களுக்கு பல்வேறு தள்ளுபடிகளையும் வழங்குகின்றன. அதே நேரத்தில் ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை எக்ஸ்சேஞ்ச் செய்வது நீண்ட காலமாக பிரச்சனையாக இருந்து வருகிறது. அதை சரி செய்யும் பொருட்டு தற்போது பிளிங்கிட் 10 நிமிடங்களில் ரிட்டன் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
