புரோ கபடியில் தமிழக வீரர்கள்

Spread the love

11வது புரோ கபடி தொடருக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் எப்போதும் இல்லாத வகையில் தமிழக வீரர்கள் பலர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அஜித்தை ரூ.66 இலட்சத்திற்கு புனே அணி ஏலத்தில் எடுத்தது. அவரைத் தொடர்ந்து ஸ்டூவர்ட்டை ரூ.14.2 இலட்சத்திற்கும், தமிழ்நாட்டின் சிறந்த கபடி வீரர் சதீஷ் குமாரை ரூ.13 இலட்சத்திற்கும், தனசேகரனை ரூ.9.4 இலட்சத்திற்கும் மும்பை அணி வாங்கியது. இளம் வீரர் தரணிதரனை ரூ.13 இலட்சத்திற்கு ஜெய்ப்பூர் அணியும், மணிகண்டனை ரூ.9 இலட்சத்திற்கு ஹரியானா அணியும் வாங்கியது. ஐசிஎப் அணி வீரர் தியாகராஜனை ரூ.13.1 இலட்சத்திற்கும், தடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கும் பாபுவை ரூ.13 இலட்சத்திற்கும் பாட்னா அணி ஏலத்தில் எடுத்தது. இதுதவிர தமிழ் தலைவாஸ் அணியில் ராம்குமார் மாயாண்டி மற்றும் அபிஷேக் ஆகிய இரண்டு தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். புரோ கபடியில் தமிழக வீரர்களின் இந்த எழுச்சி, ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *