‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ -ஆளுநர் பதில்

Spread the love

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா மற்றும் ‘இந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இந்த விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடியபோது, ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகள் மட்டும் பாடப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் ஓர் ஆளுநருக்கு எதிராக முதல்வர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமானது, மலிவானது. இது, முதல்வரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது” என ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டமாக தெரிவித்துள்ளார். ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடியதன் சர்ச்சையில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய எதிர்வினைக்கு இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *