டெல்லியில் காற்று மாசு: சுவாசப் பிரச்சினைகளால் பொது மக்கள் அவதி

Spread the love

டெல்லியில் தற்போது காற்றின் தரம் 226 ஆக பதிவாகியுள்ளது. இந்த அளவு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் சுவாச பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். காற்றில் உள்ள மாசை அளவிட காற்று தரக் குறியீடு (AQI) பயன்படுத்தப்படுகிறது. ஏக்யூஐ எனப்படும் காற்று தரக் குறியீடு பூஜ்ஜியம் முதல் 50 வரை இருந்தால் சிறந்த நிலையாகக் கருதப்படுகிறது. 51 முதல் 100 என்பது திருப்திகரமானது, 101 முதல் 200 இருந்தால் காற்று மாசு மிதமானதாக நிர்ணயிக்கப்படுகிறது. 201 முதல் 300 அளவுக்கு சென்றால், காற்றில் மாசு அதிகம். 301 முதல் 400 வரை மிக அதிகம். 401 முதல் 500 ஏக்யூஐ என்பது மிகவும் மோசமான காற்று மாசு என்று அளவிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *