கனடா பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் லிபரல் கட்சியின் 153 எம்.பிக்களில் 24 பேர் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் அக்டோபர் 28 ஆம் தேதிக்குள் ட்ரூடோ தனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டும் என எம்.பிக்கள் அவகாசம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 2025 அக்டோபருக்குள் நடக்கவுள்ள அடுத்த கூட்டாட்சித் தேர்தலில் ட்ரூடோவின் தலைமையின் கீழ் கட்சி பெரிய இழப்பை சந்திக்கலாம் என எம்.பிக்கள் அஞ்சுகின்றனர். மேலும், தற்போதைய கருத்துக்கணிப்புகளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு சாதகமாக உள்ளது.
