நாடு முழுவதும் மாநிலங்களின் நேரடி வரி வருவாய் மற்றும் வருமான வரி வருவாய் குறித்து எஸ்.பி.ஐ., அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நேரடி வரி விதிப்பின் மூலம் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்டிரா 38.9 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, டில்லியைப் பின்னுக்குத் தள்ளி கர்நாடகா 2வது இடத்தை பிடித்துள்ளது.
டில்லி 3வது இடத்திலும், தமிழகம் 4வது இடத்திலும், குஜராத் 5வது இடத்திலும் உள்ளது. ஒட்டுமொத்த நாட்டின் வரி வருவாயில் இந்த டாப் 5 மாநிலங்கள் மட்டுமே 70 சதவீதத்தை கொண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
