தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில், 14 மாதங்களுக்கு பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பறக்கும் மின்சார ரெயில் சேவை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இன்று முதல் இருமார்க்கமாகவும் 90 ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. சில பணிகள் முடிந்தபிறகு முழுமையானரெயில் சேவை தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
