விஜய் வழங்கிய முன்மொழிவுகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு கட்சிகளால் முன்மொழியப்பட்டவை. புதிதாக அவர் எதையும் சொல்லவில்லை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என சொல்லும் அதேவேளையில், மதத்தின் பெயரால் நடக்கும் பிளவுவாதத்தை எதிர்ப்போம்’ என சொல்கின்ற அதே உரையில் பாசிசத்தை எதிர்ப்பவர்கள் நையாண்டிக்கு உரியவர்கள், கேலிக்குரியவர்கள் என்ற வகையில் பேசி உள்ளார். அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா என கேட்டுள்ளார். இந்த இரண்டுக்கும் என்ன பொருத்தம் என தெரியவில்லை. அது நக்கல், நையாண்டி தொனியோடு வெளிப்பட்டு உள்ளது. பா.ஜ., எதிர்ப்புதான் பாசிச எதிர்ப்பு. பாசிசத்தை பா.ஜ.,வை எதிர்க்கக்கூடிய அனைவரையும் நையாண்டி செய்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. அவருடைய நிலைப்பாட்டில் தடுமாற்றம் இருக்கிறது. பா.ஜ., எதிர்ப்பில் அவருக்கு முரண்பாடு, நெருடல் உள்ளதாக உணர முடிகிறது.
