கோவை விளாங்குறிச்சியில் டைடல் பார்க்கை, முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். முன்னதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு செய்தார்.நாளை, 5ம் தேதி கோவை வரும் முதல்வர், விளாங்குறிச்சியில் எட்டு தளங்களுடன், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2.98 லட்சம் சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ள, எல்காட் டைடல் பார்க்கை திறந்து வைக்கிறார்.
