கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் ரூ.20 அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கொடைக்கானல் மலை பகுதி முழுவதுமாகவே பிளாஸ்டிக் பாட்டில்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே முழுமையாகவே தடை செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை முழுமையாக அமல்படுத்தாத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது.இந்த உத்தரவின் அடைப்படையில் கொடைக்கானல் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நெகிழி பாட்டில்கள் வைத்திருந்தால் அவர்களது பாட்டில்களை பறிமுதல் செய்து ஒரு பாட்டிலுக்கு ரூ.20 வசூலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. தற்போது இன்று முதல் அந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக இன்று கொடைக்கானல் நகராட்சி சுகாதார பிரிவை சேர்ந்த அதிகாரிகள் முதற்கட்டமாக இன்று கொடைக்கானலில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
