பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் காலமானார்

Spread the love

பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் காலமானார். அவருக்கு வயது 66.1958ம் ஆண்டு நவ.,13ம் தேதி பிறந்த இவர் பல்வேறு சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்களை எழுதி உள்ளார். சிலவற்றை இயக்கி உள்ளார். தென் மாநில ஹிந்து மத பாரம்பரியம் மற்றும் இதிகாசங்களை எழுதுவதில் புகழ்பெற்றவர். இவர் எழுதிய ‘ என் பெயர் ரங்கநாயகி’ என்ற நூல் தமிழ் வளர்ச்சி துறையின் 1999ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான 3ம் பரிசினை பெற்றது. ஆன்மிகம், சித்தர்கள் தொடர்பான இவரது கதைகள் வாசகர்கள் மத்தியில் பிரபலமானது. ‘ஆனந்தபுரத்து வீடு’, ‘ சிருங்காரம்’ ஆகிய திரைப்படங்களுக்கும் திரைக்கதை எழுதி உள்ளார். மதுரையில் உள்ள அவரது வீட்டில் குளியல் அறையில் வழுக்கி விழுந்து இந்திரா சவுந்தரராஜன் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *