Direct-to-Device (D2D) என்னும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நெட்வொர்க் இல்லாத இடங்களில் இருந்துகூட உங்களால் எமெர்ஜென்சி தொலைப் பேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். சேட்டிலைட்டையே பெரிய டவர்களாக இந்த வசதிக்கு பயன்படுத்தவிருக்கிறது BSNL. செல்ஃபோன் சிக்னல் இல்லாத இடங்களில் WIFI சிக்னலை வைத்து கால் செய்யும் வசதியை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. சிக்னல், WIFI என இரண்டும் இல்லாவிட்டாலும் இந்த D2D மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்கிறது BSNL. வெறுமனே கால் வசதி மட்டும் இல்லையாம். UPI மூலம் பண பரிமாற்றங்களையும் இந்த தொழில்நுட்பம் மூலம் சாத்தியமாக்க முடியும் என்கிறது BSNL. இன்றைய யுகத்தில் இந்த வசதி அதிக அளவில் பயனளிக்கும் என உறுதியளிக்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். VIASATஉடன் இணைந்து இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது BSNL.மக்கள் பயன்பாட்டுக்கு இது எப்போது வரும் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
