admin

சிறு வணிகர்களின் கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிப்பதா? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள் கடை வாடகை தொகையில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரியை இனி ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 23-ந் தேதி கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு மிக மோசடியானது மட்டுமின்றி, வாடகை இடத்தில் வாணிபம் செய்யும் ஏழை, நடுத்தர வணிகர்கள் மீது தொடுத்துள்ள மோசமான தாக்குதலகும். கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக…

Read More

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024: அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்

இந்தியாவின் கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் கடைசி மற்றும் 7-வது சுற்றில் முதல் போர்டில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஈரானின் அமீன் தபதாபேயியுடன் மோதினார். இந்த ஆட்டம் 15-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 2-வது போர்டில் செர்பியாவின் அலெக்ஸி…

Read More

அரசு அங்கீகாரம் பெற்ற 4750 தட்டச்சுப் பள்ளிகள் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.

தமிழக அளவில் அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிப்., ஆக., மாதங்களில் இளநிலை, முதுநிலை தமிழ், ஆங்கிலம் தட்டச்சர், சுருக்கெழுத்தர், கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமெஷன் தேர்வுகள் நடைபெறும். அரசு துறையில் தட்டச்சர் பதவிக்கு தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், சி.ஓ.ஏ., தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தட்டச்சர் பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும். சி.ஓ.ஏ., தேர்வு எழுதுவதற்கு கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், தட்டச்சர் தேர்வில்…

Read More

இணைகிறது ஏர்இந்தியா- ‘விஸ்தாரா’

 டாடா – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ கூட்டு நிறுவனமான ‘விஸ்தாரா’ விமான நிறுவனம், வருகிற இன்று (நவ. 12ம் தேதி )முதல் ஏர் இந்தியாவுடன் இணைகிறது.ஏர் இந்தியாவில், விஸ்தாரா இணைந்ததும், அதில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்சின் பங்கு 25.10 சதவீதமாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது, இதையடுத்து, அன்னிய நேரடி முதலீடுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, நேற்றுடன் (நவ.11)ம் தேதியுடன் விஸ்தாரா விமான சேவை முடிவுக்கு வருவதையடுத்து இன்று இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக இணைகின்றன.

Read More

உலக ஆணழகன் ஆனார் நாமக்கல் வீரர் சரவணன்

உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடல் திறன் கூட்டமைப்பு சார்பில், 15வது உலக ஆணழகன் போட்டி, கடந்த 5ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. மாலத் தீவில் நடந்த இப்போட்டியில், உலகின் பல நாடுகளிலிருந்து, 350க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.இதில், தமிழகத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் மணி, 90 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார்.

Read More

சென்னையில் 2024 புத்தக கண்காட்சி

தமிழ்நாடு தமிழ்ச் சங்கம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்யும் புத்தக கண்காட்சி, 27 டிசம்பர் 2024 அன்று சென்னையில் தொடங்க உள்ளது.

Read More

BSNL எடுத்த அதிரடி செயல்..

Direct-to-Device (D2D) என்னும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நெட்வொர்க் இல்லாத இடங்களில் இருந்துகூட உங்களால் எமெர்ஜென்சி தொலைப் பேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். சேட்டிலைட்டையே பெரிய டவர்களாக இந்த வசதிக்கு பயன்படுத்தவிருக்கிறது BSNL. செல்ஃபோன் சிக்னல் இல்லாத இடங்களில் WIFI சிக்னலை வைத்து கால் செய்யும் வசதியை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. சிக்னல், WIFI என இரண்டும் இல்லாவிட்டாலும் இந்த D2D மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்கிறது BSNL. வெறுமனே கால் வசதி மட்டும் இல்லையாம்….

Read More

வடகிழக்குப் பருவமழை நவ.12ம் தேதி முதல் சூடுபிடிக்கும்: பிரதீப் ஜான் கணிப்பு!

சென்னை: வடகிழக்குப் பருவமழை நவ. 12ம் தேதி முதல் சூடுபிடிக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். ‘தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகலாம். இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், இன்று முதல், 15ம் தேதி வரை கனமழை கொட்ட துவங்கும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Read More

பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் காலமானார்

பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் காலமானார். அவருக்கு வயது 66.1958ம் ஆண்டு நவ.,13ம் தேதி பிறந்த இவர் பல்வேறு சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்களை எழுதி உள்ளார். சிலவற்றை இயக்கி உள்ளார். தென் மாநில ஹிந்து மத பாரம்பரியம் மற்றும் இதிகாசங்களை எழுதுவதில் புகழ்பெற்றவர். இவர் எழுதிய ‘ என் பெயர் ரங்கநாயகி’ என்ற நூல் தமிழ் வளர்ச்சி துறையின் 1999ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான 3ம் பரிசினை பெற்றது. ஆன்மிகம், சித்தர்கள் தொடர்பான இவரது கதைகள்…

Read More

மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

சென்னை, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80) இன்று காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர்பிரிந்தது. டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Read More