admin

டொனால்டு டிரம்ப் முன்னிலை

ஓட்டு எண்ணிக்கை துவங்கிய 11 மாகாணங்களில் 54 சதவீத ஓட்டுகளுடன் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார். தேர்தலில் கமலா ஹாரிஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்

Read More

சூப்பர் ஆப்’ என்ற புதிய செயலியை  100 கோடி ரூபாய் செலவில் ரயில்வே நிர்வாகம் உருவாக்கி வருகிறது.

ரயில்வே துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது:ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., செயலி தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். தற்போது உருவாக்கப்படும் சூப்பர் செயலி, ஐ.ஆர்.சி.டி.சி., செயலியுடன் ஒருங்கிணைக்கப்படும். மேலும், ரயில்வே சேவைகளை வழங்கி வரும் பிற செயலிகளையும் இந்த சூப்பர் செயலியுடன் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பயணியர் இன்னும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் செயலி வடிவமைக்கப்பட உள்ளது.ரயில்வேக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தரும் ஒரு தொழில்நுட்ப வசதியாகத் தான் இந்த சூப்பர் செயலியை நாங்கள் கருதுகிறோம். இது, அடுத்த மாதம் இறுதியில்…

Read More

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நவ.,5ல் நடக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல், நான்காண்டுக்கு ஒரு முறை நடக்கிறது. இப்போது நடக்கும் தேர்தலில், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பிலும், முன்னாள் அதிபர் டிரம்ப் குடியரசு கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர்.அதிபர் தேர்தலில் போட்டியிடுவோர் நேரடியாக மக்களிடம் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தாலும், மக்கள் நேரடியாக அதிபரை தேர்வு செய்வதில்லை. ‘எலக்ட்ரோல் காலேஜ்’ முறை பின்பற்றப்படுகிறது. இந்த எலக்ட்ரோல் காலேஜ் மொத்த ஓட்டு எண்ணிக்கை 538 ஆகும். இதில், 270 பிரதிநிதிகளின் ஓட்டுக்களை பெறுபவர்,…

Read More

கோவையில் டைடல் பார்க்கை, முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

கோவை விளாங்குறிச்சியில் டைடல் பார்க்கை, முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். முன்னதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு செய்தார்.நாளை, 5ம் தேதி கோவை வரும் முதல்வர், விளாங்குறிச்சியில் எட்டு தளங்களுடன், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2.98 லட்சம் சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ள, எல்காட் டைடல் பார்க்கை திறந்து வைக்கிறார்.

Read More

ஆன்லைன் விற்பனை ரூ.1 லட்சம் கோடி

கடந்த வாரம் முடிவடைந்த ஒரு மாத கால பண்டிகை சீசனில், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடிக்கு பொருட்களை விற்பனை செய்துள்ளனர். இது கடந்தாண்டு விற்பனையை காட்டிலும் 23 சதவீதம் அதிகம்.ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடிக்கு பொருட்களை விற்பனை செய்திருந்தன.இது முந்தைய ஆண்டின் தீபாவளி பண்டிகை கால விற்பனையை காட்டிலும் 23 சதவீதம் அதிகம்.

Read More

வாயு கசிந்த பள்ளியில் மீண்டும் மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பெற்றோர்கள் அதிர்ச்சி

 சென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவில் விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது இங்கு கடந்த 25-ம் தேதி ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் இருந்த மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. சில மாணவிகள் மயங்கி விழுந்தனர். இதனால் சக மாணவிகள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக பாதிக்கப்பட்ட 45 மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து வாயுக்கசிவு ஏற்பட்ட அந்த பள்ளிக்கு…

Read More

த.வெ.க.,வின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் 26 தீர்மானங்கள்.

காமராஜர், ஈ.வெ.ரா., அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரையும், கட்சியின் கொள்கைகளையும் உறுதியாக பின்பற்றுவோம். கட்சியின் கொள்கைகளுக்கு ” மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள்” என்று பெயர். ஒரேநாடு ஒரே தேர்தல் என்பதை சட்டமாக்குவதற்காக பா.ஜ., அரசுக்கு கண்டனம். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை. உண்மையான சமூக நீதியை நிலைநாட்டிட தமிழக அரசு முதலில் சாதி வாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வை காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும். மருத்துவம் போலவே கல்வியும் மாநில…

Read More

கேரளாவுக்கு இன்று பிறவி தினம், கர்நாடகாவில் ராஜ்யோத்சவா.. தமிழ்நாடு நாள் மட்டும் ஜூலை 18 ஏன்?

1956ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி நாடு முழுவதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது கேரளா,கர்னாடகா மாநிலங்கள் தங்கள் மாநில நாளை, ஆண்டுதோறும் நவ.1ம் தேதி கடைபிடித்து வருகின்றன.2019ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு, இனி நவம்பர் மாதம் 1ம் தேதி மாநில தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு அப்போதே சில எதிர்ப்புகள் எழுந்தன. நிலத்தை இழந்த நாளை, மாநில நாளாக கொண்டாட முடியாது என தமிழறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சிலர் இந்த…

Read More

தங்கம் வாங்குவதில் சீனாவை விஞ்சியது இந்தியா

தங்கம் வாங்குவதில் இந்திய நுகர்வோர் சீனர்களை மிஞ்சி விட்டனர் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக தங்க கவுன்சில் வெளியிட்ட உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகள் அதிக கொள்முதல் செய்ததன் மூலம், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், சீனாவுடன் ஒப்பிடும்போது இந்திய நுகர்வோர் 51% அதிகமாக தங்கத்தை வாங்கியுள்ளனர்.இதற்கு, தங்கம் மீதான இறக்குமதி வரி 15% லிருந்து 6% ஆக, குறைத்து ஜூலை 23ம்…

Read More

சி.எஸ்.கே., அணியில் மீண்டும் களம் இறங்கும் தோனி

சென்னை: வரும் 2025ம் ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல்., போட்டியில் மீண்டும் சி.எஸ்.கே., அணிக்காக தோனி விளையாடுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அணியில் ஜடேஜா, ருத்துராஜ், பதிரனா, ஷிவம் டுபே தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

Read More