admin

வணிக சிலிண்டர் விலை உயர்வு

தமிழகத்தில், இம்மாதம்(நவம்பர்) வணிக சிலிண்டர் விலை, 61 ரூபாய் 50 பைசா உயர்ந்து 1964.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், வீட்டு சிலிண்டர் கடந்த மாதம், 818.50 ரூபாய் அதன் விலை மாற்றம் செய்யப்படாமல், அதே விலையே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த மாதம் 1,903 ரூபாய்க்கு விற்கப்பட்ட வணிக காஸ் சிலிண்டர் விலை, இம்மாதம், ரூ.61.50 உயர்ந்து, 1964.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 4 மாதங்களாக, வணிக சிலிண்டர் விலை உயர்ந்து வருவது…

Read More

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

விமான நிலையங்கள் மற்றும் மிகப்பெரிய தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா பகுதியைச் சேர்ந்த 35 வயது நபரை நாக்பூர் காவலதுறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஜக்தீஷ் உக்கி என்பவரை நாக்பூர் காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் கைது செய்திருக்கிறார்கள்.. பயங்கரவாதம் குறித்த புத்தகத்தை எழுதியவரும், ஏற்கனவே இவர் 2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

Read More

விஜய்யின் கற்பனை அதீதமாக உள்ளது நிருபர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி

விஜய் வழங்கிய முன்மொழிவுகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு கட்சிகளால் முன்மொழியப்பட்டவை. புதிதாக அவர் எதையும் சொல்லவில்லை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என சொல்லும் அதேவேளையில், மதத்தின் பெயரால் நடக்கும் பிளவுவாதத்தை எதிர்ப்போம்’ என சொல்கின்ற அதே உரையில் பாசிசத்தை எதிர்ப்பவர்கள் நையாண்டிக்கு உரியவர்கள், கேலிக்குரியவர்கள் என்ற வகையில் பேசி உள்ளார். அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா என கேட்டுள்ளார். இந்த இரண்டுக்கும் என்ன பொருத்தம் என தெரியவில்லை. அது நக்கல், நையாண்டி தொனியோடு வெளிப்பட்டு உள்ளது….

Read More

உள்நாட்டில் சி – 295 ராணுவ விமான தயாரிப்பு: 

ராணுவ வீரர்கள் மற்றும் தளவாடங்களைக் கொண்டு செல்ல, மருத்துவ மீட்புப் பணிகளில் ஈடுபட என பல்வேறு பயன்பாடுகளை கொண்ட சி-295 விமானங்கள் முழுவதும் உள்நாட்டில் தயாரிப்பதற்கான முதல் தொழிற்சாலை நிறுவனமான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட்டை( டிஏஎஸ்எல்) குஜராத்தின் வதோதரா நகரில் பிரதமர் மோடியும், ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்ஜெஷ் இணைந்து, திறந்து வைத்தனர். குஜராத் டாடா ஆலையில் சி-295 போர் விமானங்கள் தயாரிப்பதன் மூலம் உள்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகுவதுடன், மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பலம்…

Read More

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு; அடுத்த ஆண்டு தொடங்குகிறது

மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்தாண்டு தொடங்கும் என்றும், புள்ளி விபரங்கள் 2026ம் ஆண்டில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.கடைசியாக, 2011ல் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021ல் கணக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக பணிகள் தடைபட்டன. இதனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவக்கப்பட்டு,…

Read More

சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவை இன்று முதல் இயக்கம்

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில், 14 மாதங்களுக்கு பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பறக்கும் மின்சார ரெயில் சேவை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இன்று முதல் இருமார்க்கமாகவும் 90 ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. சில பணிகள் முடிந்தபிறகு முழுமையானரெயில் சேவை தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

ஆன்லைன் மோசடி; மக்களே உஷாராக இருங்க; பிரதமர் மோடி எச்சரிக்கை

மன்கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது ஆன்லைன் மோசடியில் மக்கள் உஷாராக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தை சமாளிக்க மாநில அரசுகளுடன் புலனாய்வு அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. எந்த புலனாய்வு அமைப்பும், இது போன்ற விசாரணைக்காக உங்களை தொலைபேசியில் அழைக்காது. வீடியோ அழைப்பும் போலீசாரிடம் இருந்து வராது. டிஜிட்டல் அரெஸ்ட் என்று எதுவுமே கிடையாது. அப்படி யாரேனும் போனில் அழைத்தால் அது மோசடி என்று புரிந்து கொள்ள வேண்டும்.அத்தகைய சைபர் கிரைம் குற்றங்களை தெரிவிக்க…

Read More

நேரடி வரி வருவாய் மூலம் அதிக வருமானம் ஈட்டிய மாநிலங்கள்

நாடு முழுவதும் மாநிலங்களின் நேரடி வரி வருவாய் மற்றும் வருமான வரி வருவாய் குறித்து எஸ்.பி.ஐ., அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நேரடி வரி விதிப்பின் மூலம் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்டிரா 38.9 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, டில்லியைப் பின்னுக்குத் தள்ளி கர்நாடகா 2வது இடத்தை பிடித்துள்ளது.டில்லி 3வது இடத்திலும், தமிழகம் 4வது இடத்திலும், குஜராத் 5வது இடத்திலும் உள்ளது. ஒட்டுமொத்த நாட்டின் வரி வருவாயில் இந்த டாப் 5…

Read More

 நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் -விஜய்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கின. கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் விஜய் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். முன்னதாக, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். கொள்கை பரப்பு செயலாளர் தாகிரா, தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி மற்றும்…

Read More