
மாஜி அ.தி.மு.க., அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!
சென்னை: ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்திற்கு சொந்தமான தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகே உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.