
நாய் வளர்ப்பு கொள்கை – அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் நாய்களை வளர்ப்பதற்கு புதிய கொள்கைகளை (Tamil Nadu State Dog Breeding Policy) வகுத்து கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி அரசாணை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு வெளியிட்ட நாய் வளர்ப்புக் கொள்கையைப் பின்பற்றி இவை வடிவமைக்கப்பட்டதாக, மாநில அரசின் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அதன்படி, ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, கட்டை, ராமநாதபுரம் மண்டை நாய், மலைப்பட்டி, செங்கோட்டை நாய் ஆகியவற்றுக்கு நாட்டு நாய் என்ற…