admin

இந்திய விமானப் படை தினத்தையொட்டி, சென்னையில் அக்.6-ஆம் தேதி பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி

இந்திய விமானப் படை தினத்தையொட்டி, சென்னையில் அக்.6-ஆம் தேதி பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று காலை 11 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், விமானப் படையின் 72 விமானங்கள் சாகசங்களில் ஈடுபடவுள்ளன.இந்திய விமானப் படை சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை இன்று சென்னை மெரீனா கடற்கரையில் நடத்தப்பட்ட நிலையில், சென்னை மற்றும் புறநகர் மீது விமானப் படை விமானங்கள் பறந்தததை மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். விமானப்…

Read More

காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்; தூய்மை பணி மேற்கொண்ட கவர்னர் ரவி

‘தூய்மை பாரதம்’ என்னும் திட்டத்தை மத்திய அரசு 2014-ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் காந்தி மண்டபத்தில் மாணவர்களுடன் இணைந்து தூய்மை பணியில் கவர்னர் ஆர்.என்.ரவி ஈடுபட்டார், நாளை (அக்.,02) காந்தி ஜெயந்தியையொட்டி, வாளியில் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்தார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், கவர்னர் ரவி கூறியதாவது: மகாத்மா காந்தி சுதந்திர இயக்கத்தின் தலைவர் மட்டுமல்ல; அவர்…

Read More

ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி வழங்கியது ஐகோர்ட்

விஜயதசமியை முன்னிட்டு வரும் 6ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் நேற்றைய விசாரணையின் போது 42 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட கோர்ட், தமிழக அரசும், போலீசாரும் கண்ணாமூச்சி ஆடுவதாக கடும் அதிருப்தி தெரிவித்தது. இந் நிலையில் இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 42 இடங்களுடன்…

Read More

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பணிகளை மண்டல வாரியாக ஒருங்கிணைத்து துரிதப்படுத்த 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம். வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்த நிலையில் உத்தரவு பிறப்பித்துள்ளார்

Read More

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.48 உயர்ந்தது. ரூ.1,903-க்கு விற்பனை செய்யப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் இல்லை.

Read More

அப்பல்லோவில் அனுமதி ; ரஜினிக்கு இன்று மருத்துவ பரிசோதனை

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினி, 73, நேற்றிரவு சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இன்று அவருக்கு முக்கிய பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.பரிசோதனைக்கு பிறகு இன்றே வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Read More

ஜம்மு காஷ்மீர்: இறுதி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்

10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. 90 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல் நடக்கிறது. கடந்த 18-ந் தேதி 24 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடந்தது. 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 25-ந் தேதி 26 தொகுதிகளில் 2-வதுகட்ட தேர்தல் நடந்தது. 57.31 சதவீத வாக்குகள் பதிவாகின.இந்நிலையில், 40 சட்டசபை தொகுதிகளில் இன்று 3-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு…

Read More

லட்டு விவகாரம்: கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது – சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும்போது, முதல்-மந்திரி என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள், ஏன் இந்த விவகாரத்தைநேரடியாக ஊடகங்களிடம் ஏன் எடுத்துச் சென்றீர்கள்? எஸ்டிஐ குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு முன் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டிய அவசியம் என்ன? லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்? திருப்பதி லட்டு விவகாரத்தில் கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது. மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினார்.

Read More

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரையும் மீட்க எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்

இந்திய வம்சாவளியை சேந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் இவர்கள் விண்வெளிக்கு சென்றனர். அங்கிருந்து ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14ஆம் தேதி பூமிக்கு திரும்ப திட்டமிட்டு இருந்தனர். வெறும் 8 நாட்கள் மட்டுமே விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு செய்யும் திட்டத்துடன் இவர்களை நாசா அனுப்பி வைத்தது. ஆனால், சுனிதா வில்லியம்ஸ் உள்பட இருவரும் பயணித்த ஸ்டார்லைனர்…

Read More

பாராசிட்டமால், பான் டி உள்பட 53 மருந்துகள் தரக்கட்டுப்பாட்டுத் தேர்வில் தோல்வி!

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, பாராசிடமால், விட்டமின் டி, கால்சியம் சத்து மாத்திரைகள், உயர் ரத்த அழுத்த மாத்திரைகள், நீரிழிவு மாத்திரைகள், நிர்ணயிக்கப்பட்ட தர அளவில் இல்லை. மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், ஒவ்வொரு மாதமும் தன்னிச்சையாக மாத்திரைகளின் மாதிரிகளை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்புவார்கள். அதன்படி, ஆகஸ்ட் மாத ஆய்வு முடிவு இந்த தகவல்களை அளித்திருக்கிறது. விட்டமின் சி, டி3 மாத்திரைகள், ஷெல்கால், விட்டமின் பி காம்ப்ளெக்ஸ், விட்டமின்…

Read More