admin

இன்று மேலும் 2 பதக்கங்கள்

பாரிஸ், பாரா ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்கள் வென்றுள்ள நிலையில் மேலும் 2 பதக்கங்கள். ஆடவருக்கான 100மீ ஏர் பிஸ்டல் SH1 போட்டியில் வெள்ளிப் பதக்கத்துடன் இந்தியாவின் நான்காவது பதக்கத்தை மணீஷ் நர்வால் பதிவுசெய்தார் மேலும் போட்டி வரலாற்றில் பல தனிநபர் பதக்கங்களை வென்ற ஒரே ஆறாவது இந்தியர் ஆனார்.2024 பாராலிம்பிக்கில் பெண்களுக்கான டி35 100 மீட்டர் போட்டியில் பாரா தடகளப் போட்டியில் இந்தியாவின் முதல் வெண்கலப் பதக்கத்தை ப்ரீத்தி பால் வென்றார்.

Read More

பாரா ஒலிம்பிக்-தங்கம்,வெண்கலம் வென்ற இந்தியர்கள்

இந்திய வீராங்கனை அவனி லேகரா 249.7 புள்ளிகள்(ஓலிம்பிக் ரெகார்ட்) பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். தென் கொரியா வீராங்கனை லீ யுன்ரி 246.8 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் மற்றும் இந்திய வீராங்கனை மோனா அகர்வால் 228.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றனர்.

Read More

ஹெச்.ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு

அரசியல் குறித்து படிக்க 3 மாதங்களுக்கு லண்டன் சென்றுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த இடைப்பட்ட காலத்துக்கான பாஜக பொறுப்புத் தலைவராக இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.  இந்தநிலையில், கட்சி சார்ந்த பணிகளில் முடிவெடுக்க ஹெச்.ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என பாஜக தற்போது அறிவிப்பினை வெளியாகியிட்டுள்ளது.குழுவில், எச்.ராஜா ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த குழுவில் தமிழக பாஜக துணை தலைவர் சக்கரவர்த்தி, கனகசபாபதி, மாநில பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், பேராசிரியர் ராம சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்…

Read More

பாரா ஒலிம்பிக் ஷீத்தல் தேவி அசத்தல்

இந்திய வில்வித்தை வீராங்கனையான ஷீத்தல் தேவி உலக சாதனையை ஜஸ்ட் மிஸ்ஸில் தவறவிட்டுள்ளார். மகளிருக்கான வில்வித்தை போட்டியில் ரேங்கிங் சுற்றுகள் நடத்தப்பட்டன. இந்த ரேங்கிங் சுற்று மூலமாக அணிகள் பிரிக்கப்படும். இதில் 17 வயதாகும் இந்திய வீராங்கனையான ஷூத்தல் தேவி 703 புள்ளிகள் பெற்று அசத்தியுள்ளார்.704 தான் உலக சாதனை.

Read More

பாரா ஒலிம்பிக் 2024 பாரிஸ்

பாரிஸ் : மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் விளையாட்டு தொடர் ஆகஸ்ட் 28ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த தொடரில் சுமார் 4400 விளையாட்டு வீரர்கள் உலகம் முழுவதும் பங்கேற்கிறார்கள். இதில் இந்தியாவில் இருந்து 84 வீரர்கள் சுமார் 12 போட்டி பிரிவுகளில் விளையாடுகின்றனர்.கடந்த முறை இந்தியா 38 பேர் கொண்ட குழுவை அனுப்பி, அதில் 19 பதக்கங்களை வாங்கியது. இந்த நிலையில் இம்முறை இந்தியாவில் இருந்து 84 வீரர், வீராங்கனைகள் சென்றிருப்பதால் அதிக பதக்கம் இந்தியா…

Read More

மலையாள சினிமா துறையை உலுக்கிய  அறிக்கை

2017ம் ஆண்டு உருவாக்கபப்ட்டது. ‘வுமென் இன் சினிமா கலெக்டிவ்’ என்ற பெண்கள் அமைப்பு இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வலியுறுத்தியது. பெண் நடிகைகள் பலரும், பிரபலமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களால் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளானதாக புகார்களை முன்வைத்துள்ளனர். இதனையே நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையும் உறுதி செய்திருந்தது. அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு, பாதுகாப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களும், அவர்கள் குற்றம் சுமத்திய ஆண்களின் பெயர்களும் அடங்கிய பகுதிகள் அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

Read More

ஆதார் அட்டைகளை புதுப்பிக்க அறிவுறுத்தல்

ஆதார் அட்டை வைத்திருக்கும் நபர்கள், ஆதார் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டும். அந்த அடிப்படையில், ஆதார் அட்டைகளை புதுப்பிக்க ஆதார் ஆணையம் மக்களை அறிவுறுத்தி வருகிறது. ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை புதுப்பித்துக்கொள்ள வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணங்களுடன் அருகில் உள்ள ஆதார்…

Read More

பாஸ்போர்ட் சேவை இணையத்தளம் இரண்டு நாட்கள் இயங்காது

தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக பாஸ்போர்ட் சேவைகள் வழங்கும் இணையத்தளம் வரும் 29 இரவு முதல் செப்டம்பர் 2 காலை வரை இயங்காது என அறிவித்தது.

Read More