டெல்லியில் பிப்.5ம் தேதி தேர்தல் 

டெல்லியில் 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிப்.5ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். டெல்லியில் 70 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் பிப்.8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன.10இல் தொடங்கி 17இல் நிறைவடையும்.   ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்ரவரி.5ம் தேதி இடைத்தேர்தல்

Read More

கர்நாடகத்தை தொடர்ந்து குஜராத்திலும் 2 வயதுக் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு

அகமதாபாத்: கர்நாடகத்தை தொடர்ந்து குஜராத்திலும் 2 வயதுக் குழந்தைக்கு ஹியுமன் மெட்டா நிமோவைரஸ் ‘HMPV’ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தின் சந்த்கேடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 வயது பெண் குழந்தை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பெங்களூருவில் 3 மாதக் குழந்தை மற்றும் 9 மாதக் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதித்துள்ளதாக தகவல்

Read More

குகேஷ், மனு பாகருக்கு கேல் ரத்னா விருது

புதுடில்லி: உலக செஸ் சாம்பியன் குகேஷ், ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற மனு பாகருக்கு மத்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக செஸ் சாம்பியன் குகேஷ்ஹாக்கி வீராங்கனை ஹர்மன்ப்ரீத் சிங் பாரா தடகள வீரர் பிரவீன் குமார்ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற மனு பாகர்ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

Read More

போபால் ஆலை நச்சுக்கழிவு; 40 ஆண்டுக்குப் பிறகு அகற்றம்

போபால்: மத்திய பிரதேசத்தின் போபாலில் அமைந்துள்ள, ‘யூனியன் கார்பைட்’ பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில், 1984 டிச., 23ல், விஷயவாயு கசிவு ஏற்பட்டது. மிகவும் கோரமான இந்த சம்பவத்தில், 5,479 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர, உடல் உறுப்புகளை இழந்து நிரந்தர சுகாதார பிரச்னைகளால், ஐந்து லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூடப்பட்டுள்ள இந்த ஆலையில் உள்ள, 3 லட்சத்து 77,000 கிலோ கழிவுகளை அகற்றுவது தொடர்பான பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக விசாரித்த மத்திய பிரதேச…

Read More

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்

ஆன்லைன் மோசடிகளை தடுக்க செயலற்ற வங்கிக்கணக்குகள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேலாக பணப் பரிமாற்றம் நடக்காத வங்கிக் கணக்குகள், நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

Read More

மருந்துகள் விலை உயர்வு ஏன்? விளக்கம் கேட்கிறது நிலைக்குழு

புதுடில்லி: கடந்த அக்டோபரில், 11 மருந்துகள் மீது 50 சதவீத விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்ததற்கு விளக்கம் அளிக்கும்படி, தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு பார்லி., நிலைக்குழு உத்தரவிட்டுள்ளது.என்.பி.பி.ஏ., எனப்படும் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம், கடந்த அக்டோர் 15ம் தேதி வெளியிட்ட உத்தரவில், 11 மருந்துகளுக்கான விலையை 50 சதவீதம் அதிகரிக்க அனுமதித்துள்ளது. பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளுக்கு ஏற்ப விலையை உயர்த்த கோரி மருந்து நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்றதாக அது…

Read More

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி..!! சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா..!!

9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. முதலாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பான் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சீனா – தென் கொரியா அணிகள் மோதின….

Read More

உலக செஸ் சாம்பியன் குகேஷ்

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் குகேஷ்க்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், சர்வதேச போட்டிகளில் விளையாடி, உலக சாம்பியன் என்ற பட்டத்தை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக, உலக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் தற்போது பெற்றுள்ளார்.சரித்திரம் படைத்துள்ள செஸ் வீரருக்கு, நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

Read More

இழுபறி முடிவுக்கு வந்தது மகாராஷ்டிரா முதல்வர் பட்நவிஸ்: மும்பையில் இன்று பதவியேற்பு விழா

மகாராஷ்டிரா முதல்வர் யார் என்ற கேள்விக்கு தேர்தல் முடிவு வெளியான 12 நாளுக்கு பிறகு விடை கிடைத்துள்ளது. பாஜவை சேர்ந்த தேவேந்திர பட்நவிஸ் நேற்று தேர்வு செய்யப்பட்டார். மும்பை ஆசாத் மைதானத்தில் இன்று பதவியேற்பு விழா நடக்கிறது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள், மத தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். 

Read More

உ.பி. கலவரத்தில் 3 பேர் உயிரிழப்பு; வாகனங்களுக்கு தீவைப்பு

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்​தில் கட்டப்​பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரி​களுக்​கும், உள்ளூர் மக்களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்​டது. இது கலவரமாக மாறியதில் 3 பேர் உயிரிழந்​தனர். 30 போலீ​ஸார் காயமடைந்​தனர்.

Read More