ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம்

ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஏலம் நடைபெறுகிறது. 1,574வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில் 577 வீரர்கள் இறுதியாக ஏலத்தில் இடம்பெற உள்ளனர். ஐ.பி.எல். வீரர்கள் ஏலம்இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஏல நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யபடுகிறது.

Read More

கௌதம் அதானி மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டுகள் பதிவு 

நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அரசு வழக்கறிஞர் ( US Attorney) அலுவலகம் பதிவு செய்துள்ள குற்றச்சாட்டின்படி, “இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சூரிய ஒளி மின் விநியோக ஒப்பந்தங்களுக்காக, தோராயமாக 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை, (கிட்டத்தட்ட ரூ. 2 ஆயிரம் கோடி) இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்க அதானி ஒப்புக்கொண்டுள்ளார் இதனை மறைத்து, அமெரிக்காவில் உள்ள ஊழலுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் வழக்கங்களை மீறி, அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து கடனாகவும், பத்திரங்கள் மூலமாகவும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை…

Read More

மஹாராஷ்டிராவில் 65.1 சதவீதம் ஓட்டுப்பதிவு; 30 ஆண்டுகளில் அதிகம்!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, 288 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 1995ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, நேற்று அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் 65.1 சதவீதம் ஓட்டுப் பதிவு ஆகியுள்ளது.

Read More

அமெரிக்கா குற்றச்சாட்டு எதிரொலி: அதானி நிறுவன குழும பங்குகள் கடும் சரிவு

அதானி சூரிய ஓளி மின்சாரத்தை பெறுவதற்கு 25 கோடி டாலர்கள் லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு கொடுத்து பெற்றுள்ளார். அதில் அமெரிக்கர்களை முதலீடு செய்ய வைத்து மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தியுள்ளார்’ என நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று (நவ.,21) அதானி குழு நிறுவன பங்குகள் விலை சரிந்துள்ளன.

Read More

நாடாளுமன்ற கூட்டத்தொடர் 25ல் தொடங்குகிறது

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அவையை சுமூகமாக நடத்த வரும் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநில தேர்தல் முடிவுகள் வரும் 23ம் தேதி வெளியாகும் நிலையில், அதன் முடிவுகள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் என்பதால் இக்கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

Read More

மராட்டியம், ஜார்கண்ட்டில் இன்று வாக்குப்பதிவு

மும்பை,;மஹாராஷ்டிராவில் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஜார்க்கண்டில், 38 தொகுதிகளில் கடைசி மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஓட்டுச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்காக, 1,00,186 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7:00 – மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில், 4,140 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Read More

10 ஆண்டுக்கு பின் ரயில்வே சங்க தேர்தல்

கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால், 2013ம் ஆண்டுக்கு பின், தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடக்கவில்லை. அடுத்த மாதம் 4, 5, 6ம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, ரயில்வேயில் உள்ள, 17 மண்டலங்களில் பணியாற்றும், 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவை பெற, தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன.தெற்கு ரயில்வேயில், எஸ்.ஆர்.எம்.யு., எனப்படும், தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன், டி.ஆர்.இ.யு., எனப்படும் தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கம், எஸ்.ஆர்.இ.எஸ்., எனப்படும் தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட…

Read More

சிறு வணிகர்களின் கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிப்பதா? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள் கடை வாடகை தொகையில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரியை இனி ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 23-ந் தேதி கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு மிக மோசடியானது மட்டுமின்றி, வாடகை இடத்தில் வாணிபம் செய்யும் ஏழை, நடுத்தர வணிகர்கள் மீது தொடுத்துள்ள மோசமான தாக்குதலகும். கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக…

Read More

இணைகிறது ஏர்இந்தியா- ‘விஸ்தாரா’

 டாடா – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ கூட்டு நிறுவனமான ‘விஸ்தாரா’ விமான நிறுவனம், வருகிற இன்று (நவ. 12ம் தேதி )முதல் ஏர் இந்தியாவுடன் இணைகிறது.ஏர் இந்தியாவில், விஸ்தாரா இணைந்ததும், அதில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்சின் பங்கு 25.10 சதவீதமாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது, இதையடுத்து, அன்னிய நேரடி முதலீடுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, நேற்றுடன் (நவ.11)ம் தேதியுடன் விஸ்தாரா விமான சேவை முடிவுக்கு வருவதையடுத்து இன்று இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக இணைகின்றன.

Read More

BSNL எடுத்த அதிரடி செயல்..

Direct-to-Device (D2D) என்னும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நெட்வொர்க் இல்லாத இடங்களில் இருந்துகூட உங்களால் எமெர்ஜென்சி தொலைப் பேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். சேட்டிலைட்டையே பெரிய டவர்களாக இந்த வசதிக்கு பயன்படுத்தவிருக்கிறது BSNL. செல்ஃபோன் சிக்னல் இல்லாத இடங்களில் WIFI சிக்னலை வைத்து கால் செய்யும் வசதியை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. சிக்னல், WIFI என இரண்டும் இல்லாவிட்டாலும் இந்த D2D மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்கிறது BSNL. வெறுமனே கால் வசதி மட்டும் இல்லையாம்….

Read More