
‘சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகள் தீராத நோய்களையும் தீர்க்கும்’ என்பது போன்ற விளம்பரங்களை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய ஆயுஷ் அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ஆயுஷ் அமைச்சகம் எந்த ஒரு சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி நிறுவனங்களின் மருந்துகளுக்கு அங்கீகாரமோ, விற்பனை செய்யும் உரிமமோ வழங்குவதில்லை.மருந்து மற்றும் அழகு சாதன பொருட்களுக்கான சட்டப்படி, விற்பனை அனுமதியை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மட்டுமே வழங்கும்.‘ஆயுர்வேதா, சித்தா உள்ளிட்ட மருந்துகள் அற்புதங்களை நிகழ்த்தும், தீர்க்க முடியாத நோய்களையும் தீர்க்கும்’ என்பது போன்று விளம்பரங்கள் செய்வது சட்டப்படி குற்றம்.