இலங்கை பார்லிமென்டில் பெரும்பான்மையை கைப்பற்றியது அனுரா கட்சி

இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் அனுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி கட்சி 159 இடங்களை கைப்பற்றி உள்ளது. அக்கட்சி 61.6 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.அனைத்து கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி, தேசிய மக்கள் சக்தி ஒட்டுமொத்தமாக 61.6 சதவீத ஓட்டுக்களை பெற்றது.சஜித் பிரேமதாசா தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 17.7 சதவீத ஓட்டுக்களுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது.இதற்கு அடுத்தபடியாக, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி 4.5 சதவீத ஓட்டுடன் 3வது இடத்தையும்,ராஜபக்சேவின் இலங்கை…

Read More

உலக ஆணழகன் ஆனார் நாமக்கல் வீரர் சரவணன்

உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடல் திறன் கூட்டமைப்பு சார்பில், 15வது உலக ஆணழகன் போட்டி, கடந்த 5ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. மாலத் தீவில் நடந்த இப்போட்டியில், உலகின் பல நாடுகளிலிருந்து, 350க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.இதில், தமிழகத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் மணி, 90 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார்.

Read More

டொனால்டு டிரம்ப் முன்னிலை

ஓட்டு எண்ணிக்கை துவங்கிய 11 மாகாணங்களில் 54 சதவீத ஓட்டுகளுடன் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார். தேர்தலில் கமலா ஹாரிஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்

Read More

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நவ.,5ல் நடக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல், நான்காண்டுக்கு ஒரு முறை நடக்கிறது. இப்போது நடக்கும் தேர்தலில், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பிலும், முன்னாள் அதிபர் டிரம்ப் குடியரசு கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர்.அதிபர் தேர்தலில் போட்டியிடுவோர் நேரடியாக மக்களிடம் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தாலும், மக்கள் நேரடியாக அதிபரை தேர்வு செய்வதில்லை. ‘எலக்ட்ரோல் காலேஜ்’ முறை பின்பற்றப்படுகிறது. இந்த எலக்ட்ரோல் காலேஜ் மொத்த ஓட்டு எண்ணிக்கை 538 ஆகும். இதில், 270 பிரதிநிதிகளின் ஓட்டுக்களை பெறுபவர்,…

Read More

தங்கம் வாங்குவதில் சீனாவை விஞ்சியது இந்தியா

தங்கம் வாங்குவதில் இந்திய நுகர்வோர் சீனர்களை மிஞ்சி விட்டனர் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக தங்க கவுன்சில் வெளியிட்ட உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகள் அதிக கொள்முதல் செய்ததன் மூலம், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், சீனாவுடன் ஒப்பிடும்போது இந்திய நுகர்வோர் 51% அதிகமாக தங்கத்தை வாங்கியுள்ளனர்.இதற்கு, தங்கம் மீதான இறக்குமதி வரி 15% லிருந்து 6% ஆக, குறைத்து ஜூலை 23ம்…

Read More

ஈரான் மீது தாக்குதல்; துவங்கியது இஸ்ரேல் ராணுவம்!

ஈரானில் உள்ள ராணுவ நிலைகள் மீது துல்லியமான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் துவங்கி உள்ளது. இதனால் மேற்காசியாவில் பதற்றம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

Read More

கனடா பிரதமரை பதவி விலக வலியுறுத்தும் அவை உறுப்பினர்கள்

கனடா பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் லிபரல் கட்சியின் 153 எம்.பிக்களில் 24 பேர் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் அக்டோபர் 28 ஆம் தேதிக்குள் ட்ரூடோ தனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டும் என எம்.பிக்கள் அவகாசம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 2025 அக்டோபருக்குள் நடக்கவுள்ள அடுத்த கூட்டாட்சித் தேர்தலில் ட்ரூடோவின் தலைமையின் கீழ் கட்சி பெரிய இழப்பை சந்திக்கலாம் என எம்.பிக்கள் அஞ்சுகின்றனர். மேலும், தற்போதைய கருத்துக்கணிப்புகளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு…

Read More

அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு பில்கேட்ஸ் ஆதரவு

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் களமிறங்கி உள்ளனர். கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு, அதிக செல்வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கமலாவுக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளார்.

Read More

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு சந்திரயான் 3 திட்ட பணிகளுக்காக உலக விண்வெளி விருது:

 இந்த ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் ஐஏஎப் உலக விண்வெளி விருது, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் மிகவும் மதிக்கப்படும், இந்த விருதை பெற்றுள்ள அவருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

Read More

போன், இ-மெயில் என்றிருந்த நிலையில் தற்போது சமூக ஊடகம் மூலம் 6 நாளில் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கடும் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு முடிவு

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் முன்பெல்லாம் கட்டுப்பாட்டு அறை, இ-மெயிலில் மிரட்டல்களை விடுத்து வந்தனர். தற்போது அவர்கள் சில சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கின்றனர். வெடிகுண்டு மிரட்டலால் டிக்கெட் வாங்கி விமானத்தில் பயணம் செய்பவர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல் விவரிக்க முடியாதது. பெரும்பாலும், புறப்பட்ட பிறகு ெவடிகுண்டு மிரட்டல் செய்தி வருவதால், மீண்டும் விமான நிலையம் திரும்புவதா? அல்லது வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடுவதா? என்ற குழப்பங்களும் நடக்கிறது. அதனால் பாதுகாப்பு ஏஜென்சிகள்…

Read More