அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்.

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று (23) பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

Read More

ஜனாதிபதி தேர்தலில் திருப்பு முனை! இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பம்

இலங்கை 2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் வெற்றி பெறுவதற்குத்தேவையான ஐம்பது வீத வாக்குகளைப் பெறமுடியாது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. அதன் காரணமாக தற்போதைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரைத் தவிர மற்றவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு, இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்படும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, எண்ணிக்கையின் முடிவில் எந்த வேட்பாளரும் 50% ஐ எட்டாதபோது, ​​முதல் 2 வேட்பாளர்களைத்…

Read More

அனுரா குமார திசநாயகே

அனுரா குமார திசநாயகே, 56, தற்போதைய பார்லிமென்டில் எம்.பி.,யாக இருக்கிறார். இவர் ஜனதா விமுக்தி பெரமுனா என்ற ஜே.வி.பி., கட்சியின் தலைவர்.இலங்கையில் தேர்தல் மூலம் ஆட்சியை கைப்பற்றும் நிலையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியான ஜே.வி.பி., தலைவர் அனுரா திசநாயகே, 51 சதவீதம் ஓட்டுகளுடன் முன்னணியில் உள்ளார்.

Read More

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு

இலங்கையில், காலை 7 மணிக்குத் துவங்கிய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும். வாக்குப்பதிவு முடிவடைந்த சில மணி நேரத்திலேயே வாக்கு எண்ணிக்கை துவங்கும். சனிக்கிழமை நள்ளிரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரியவரலாம்.இலங்கையில் ஜனாதிபதி தேர்தலைப் பொருத்தவரை, விருப்ப வாக்கு அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி வாக்காளர்கள், வேட்பாளர் பட்டியலில் இருந்து மூன்று பேரைத் தேர்வுசெய்யலாம். 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். எந்த…

Read More