வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பணிகளை மண்டல வாரியாக ஒருங்கிணைத்து துரிதப்படுத்த 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம். வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்த நிலையில் உத்தரவு பிறப்பித்துள்ளார்

Read More

அப்பல்லோவில் அனுமதி ; ரஜினிக்கு இன்று மருத்துவ பரிசோதனை

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினி, 73, நேற்றிரவு சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இன்று அவருக்கு முக்கிய பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.பரிசோதனைக்கு பிறகு இன்றே வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Read More

தமிழக மீனவா்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்

இலங்கை கடற்படையினரால் 37 தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

Read More

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை 2 படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. தமிழ்நாடு மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்படுவது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

துணை முதல்வராகும் உதயநிதி

சென்னை: தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று அமைச்சரவையில் மாற்றம் செய்ய கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அதேபோல, அமைச்சர்கள், மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், புதிய அமைச்சர்களாக, செந்தில் பாலாஜி, நாசர் மற்றும் செழியன், ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

Read More

470 ஏக்கர் பரப்பில் புதிய கார் உற்பத்தி ஆலை: மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

Read More

காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவளவிழா பொதுக் கூட்டம்

திமுக பவள விழா பொதுக் கூட்டம் காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில் உள்ள பச்சையப்பன் ஆடவா் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (செப். 28) நடைபெறுகிறது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறாா்

Read More

கோர்ட் தீர்ப்பு எதிரொலி-பழைய பள்ளி கட்டடங்களை உடனே இடிக்க அரசு உத்தரவு

சென்னை: பயன்பாடில்லாத பழைய பள்ளி கட்டடங்களை இடிக்க, பள்ளி மேலாண்மை குழுவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித் துறை செயலர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.

Read More

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “பாப்பம்மாளின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இயற்கை விவசாயத்தில் தனி முத்திரை பதித்தவர். அடக்கம் மற்றும் கனிவான இயல்புக்காக மக்கள் அவரை போற்றினர்” என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, பாப்பம்மாள் பாட்டியின் குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும் தனது ஆறுதலை கூறினார்.

Read More

வட மாநில கொள்ளையர்களை சுட்டுபிடித்த தமிழக போலீஸ்

கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்., மையங்களில் நேற்று நள்ளிரவு கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. கேஸ் கட்டர் மூலம் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திய மர்ம நபர்கள் கிட்டத்தட்ட 66 லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பிச் சென்றனர். மேலும் வேறு ஒரு பகுதியில் இருந்து ஏடிஎம் எந்திரம் ஒன்றையும் அலேக்காக கடத்திச் சென்றுள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ பகுதிக்குச் சென்று தடயங்களை சேகரித்து புலன் விசாரணையை துவக்கினர். முதல் கட்ட விசாரணையில் வெள்ளை நிற கார் ஒன்று…

Read More