
காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த தடை
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, நாளை (செப்., 28) முதல் அக்., 6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை. ‘இந்த நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது; பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு விடைத்தாள்களை வழங்க வேண்டும்’ என, கடலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.