வெம்பக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு

விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், உடைந்த நிலையிலுள்ள சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 2,850-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தோண்டப்பட்ட அகழாய்வுக் குழியில் கூம்பு வடிவம் மற்றும் நீல் உருண்டை வடிவிலான…

Read More

விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா 6 மாதம் சஸ்பெண்ட்: திருமாவளவன் நடவடிக்கை

கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு “தவறான முன்மாதிரியாக” அமைந்து விடும் என்கிற…

Read More

“டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் முதல்வர் பொறுப்பில் இருக்கமாட்டேன்” – சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  “எக்காரணம் கொண்டும், தமிழகத்துக்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வரக்கூடிய வாய்ப்பே இல்லை. அதை தடுத்து நிறுத்துவோம். ஒருவேளை டங்ஸ்டன் சுரங்கம் வந்தால், இந்த முதல்வர் பொறுப்பில் நான் இருக்கமாட்டேன்.” என்று தமிழக…

Read More

 பெஞ்சல் புயல் பாதிப்பு

கனமழையால் திருவண்ணாமலை கலெக்டர் வீட்டு மதில் சுவர் இடிந்து விழுந்தது. பெஞ்சல் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழை புதுச்சேரியில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் புயல் பாதிப்பு சென்னையில் இருந்து விரைந்த ராணுவ வீரர்கள் 40 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போளூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் முன்னேயும் செல்ல முடியாமல், ஜவ்வாது மலைத்தொடரில் ஏற்பட்ட வெள்ளம் பின்னேயும் ஓடுவதால் பஸ்சானது ஒரே இடத்தில் தத்தளித்த படியே நின்ற பஸ். விழுப்புரம்…

Read More

திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்த வீடு; மீட்பு பணியில் தேசிய மீட்புக்குழு!

திருவண்ணாமலையில் பாறைகள் சரிந்து மண்ணுக்குள் புதைந்த வீட்டில், சிக்கிய 7 பேரை மீட்கும் பணியில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக, இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையால், அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில், வ.உ.சி., நகர், 11வது தெருவின் அருகே திடீரென நேற்று மாலை, 5:00 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இரவு, 7:00 மணிக்கு மழை சற்று குறைந்ததால், அப்பகுதியில் வசிப்பவர்கள் பார்த்தபோது, குடிசை வீடு ஒன்றின்…

Read More

புயல் தாமதம்; நவ.,30ல் கரையை கடக்கிறது பெங்கல் புயல்!

‘வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் உள்ளது. ‘பெங்கல்’ புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நவ.,30ம் தேதி காலை கரையை கடக்கும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணிப்பு

டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு தொடங்கி நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். நவ.26, 27ம் தேதிகளில் நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் கடலூரில் அதிக மழைப்பொழிவு பதிவாக வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்படலாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

Read More

வழக்கறிஞர் மீது நடைபெறும் தாக்குதலை தடுக்க மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமரா: பார்கவுன்சில் பரிந்துரை தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை அளிக்குமாறு தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒசூரில் நேற்று முன்தினம் வழக்கறிஞர் கண்ணன் மீது அரிவாளை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது,…

Read More

எனக்கும் முதல்வர் கனவு உண்டு: பழநியில் திருமாவளவன்.

பழனியாண்டவரை தரிசிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்பதால் அதை பார்க்க வந்தேன். நேர்த்திக் கடன் செலுத்த வந்ததாக செய்திகளைக் கிளப்பி விடுவர். உண்மையில் அதற்காக வரவில்லை.காலம் காலமாக ஆதிக்க சக்திகளுக்கு அடிமைகளாக இருக்கும் மக்களை, ஆட்சி அதிகார பீடத்தில் அமரும் வகையில், அவர்களை மாற்ற வேண்டும். அதற்கு அம்மக்களை தகுதிப்படுத்த வேண்டும்.எனக்கும் முதல்வர் பதவி கனவு உண்டு. அதற்கேற்ப, இன்று முதல் புள்ளியை துவக்கியுள்ளோம். போகப்போக கனவை நனவாக்கும் இலக்கு நோக்கி…

Read More

அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெறும் அரையாண்டுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,2024 – 2025ம் ஆண்டு கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 துவங்கும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதன்படி அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 16 துவங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24ம் தேதி முதல் 2025 ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படுவதாகவும், ஜனவரி…

Read More