ஆவடி அருகே டைடல் தொழில்நுட்பப் பூங்கா நாளை திறப்பு

ஆவடி அருகே ரூ.330 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டைடல் தொழில்நுட்பப் பூங்காவை நானை திறந்து வைக்கிறார் முதல்வர். பட்டாபிராமில் 11.41 ஏக்கர் நிலப்பரப்பில் 5.57 லட்சம் சதுர அடியில் டைடல் தொழில்நுட்பம் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன ஸ்கை கார்டன் இணை வேலை செய்யும் இடம், வணிக மையங்கள் போன்ற முக்கிய வசதிகளுடன் கூடிய 24 மாடி ஆகும்.

Read More

உலக கோப்பை கேரம் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த காஷிமா மூன்று பதக்கங்கள் வென்று சாதனை 

அமெரிக்காவில் நடந்த, 6வது உலக கோப்பை கேரம் போட்டியில், சென்னையை சேர்ந்த, நம் தமிழ் மகள், காஷிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்கு பாராட்டுக்கள். பெருமை கொள்கிறேன் மகளே. எளியோரின் வெற்றியில் தான் அரசின் வெற்றி அடங்கி இருக்கிறது.முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து. இவர், புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள். தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு போட்டி என மூன்று பிரிவுகளிலும், இவர் வெற்றி பெற்றுள்ளர். இவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Read More

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிப்பதே குறிக்கோள்; த.வெ.க.

2026 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க.,வுடன் த.வெ.க., கூட்டணி என்று வெளியாகி வரும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது. த.வெ.க.,வின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. மக்களின் பேராதரவோடு பெரும்பான்மையுடன் வென்று தமிழக மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஊழியர்களை மிரட்டும் போக்கை கைவிடாவிட்டால் போராட்டம்; அரசுக்கு டாஸ்மாக் சம்மேளனம் எச்சரிக்கை

தஞ்சாவூரில், டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின், மாநில குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலர் திருச்செல்வன் கூறியதாவது:பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை, 20 ஆண்டுகளாக ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அ.தி.மு.க.,வும் நிறைவேற்றவில்லை; ஆளும் தி.மு.க.,வும் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளவில்லை, தி.மு.க.ஆட்சிப் பொறுப்பேற்றதும், 500 டாஸ்மாக் கடைகளை மூடியதை வரவேற்கிறோம். ஆனால், அரசு கடைகளை மூடிவிட்டு, தனியாருக்கு மனமகிழ்மன்றம் என்ற வகையில் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது,…

Read More

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்

தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர். 3.07 கோடி ஆண் வாக்காளர்கள், 3.19 கோடி பெண் வாக்காளர்கள், 8,964 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. இந்தப் பணிகள் வருகிற 28-ந் தேதி வரை நீடிக்கும்.

Read More

சிறு வணிகர்களின் கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிப்பதா? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள் கடை வாடகை தொகையில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரியை இனி ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 23-ந் தேதி கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு மிக மோசடியானது மட்டுமின்றி, வாடகை இடத்தில் வாணிபம் செய்யும் ஏழை, நடுத்தர வணிகர்கள் மீது தொடுத்துள்ள மோசமான தாக்குதலகும். கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக…

Read More

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024: அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்

இந்தியாவின் கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் கடைசி மற்றும் 7-வது சுற்றில் முதல் போர்டில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஈரானின் அமீன் தபதாபேயியுடன் மோதினார். இந்த ஆட்டம் 15-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 2-வது போர்டில் செர்பியாவின் அலெக்ஸி…

Read More

அரசு அங்கீகாரம் பெற்ற 4750 தட்டச்சுப் பள்ளிகள் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.

தமிழக அளவில் அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிப்., ஆக., மாதங்களில் இளநிலை, முதுநிலை தமிழ், ஆங்கிலம் தட்டச்சர், சுருக்கெழுத்தர், கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமெஷன் தேர்வுகள் நடைபெறும். அரசு துறையில் தட்டச்சர் பதவிக்கு தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், சி.ஓ.ஏ., தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தட்டச்சர் பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும். சி.ஓ.ஏ., தேர்வு எழுதுவதற்கு கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், தட்டச்சர் தேர்வில்…

Read More

உலக ஆணழகன் ஆனார் நாமக்கல் வீரர் சரவணன்

உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடல் திறன் கூட்டமைப்பு சார்பில், 15வது உலக ஆணழகன் போட்டி, கடந்த 5ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. மாலத் தீவில் நடந்த இப்போட்டியில், உலகின் பல நாடுகளிலிருந்து, 350க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.இதில், தமிழகத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் மணி, 90 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார்.

Read More

சென்னையில் 2024 புத்தக கண்காட்சி

தமிழ்நாடு தமிழ்ச் சங்கம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்யும் புத்தக கண்காட்சி, 27 டிசம்பர் 2024 அன்று சென்னையில் தொடங்க உள்ளது.

Read More