
வடகிழக்குப் பருவமழை நவ.12ம் தேதி முதல் சூடுபிடிக்கும்: பிரதீப் ஜான் கணிப்பு!
சென்னை: வடகிழக்குப் பருவமழை நவ. 12ம் தேதி முதல் சூடுபிடிக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். ‘தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகலாம். இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், இன்று முதல், 15ம் தேதி வரை கனமழை கொட்ட துவங்கும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.