
வாயு கசிந்த பள்ளியில் மீண்டும் மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பெற்றோர்கள் அதிர்ச்சி
சென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவில் விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது இங்கு கடந்த 25-ம் தேதி ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் இருந்த மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. சில மாணவிகள் மயங்கி விழுந்தனர். இதனால் சக மாணவிகள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக பாதிக்கப்பட்ட 45 மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து வாயுக்கசிவு ஏற்பட்ட அந்த பள்ளிக்கு…