
விளையாட்டுகளில் சாதித்த 100 வீரர்கள்: அரசு பணி
பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதித்த 100 வீரர்களுக்கு பணி வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, துணை முதல்வர் உதயநிதி, சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். அதை செயல்படுத்த, மாவட்ட வாரியாக, தகுதியான விளையாட்டு வீரர்கள் பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கி உள்ளன. விளையாட்டு வீரர்களின் கல்வித் தகுதி, சர்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் வென்ற பதக்கத்திற்கு தகுந்தபடி, அரசு துறைகளில் விரைவில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளது.