சிறாவயலில் ஜன.16ல் ஜல்லிக்கட்டு ,  முதற்கட்ட பணிகள் துவக்கம் 

சிவகங்கை: மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிறாவயல் ஜல்லிக்கட்டு ஜன.,16 ல் நடக்க உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளை விழா கமிட்டியினர் துவக்கியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் தை பொங்கலை முன்னிட்டு ஜன., முதல் மே வரை சிறாவயல், கண்டுபட்டி, அரளிப்பாறை உட்பட 150 க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமஞ்சுவிரட்டுக்கள் நடைபெறும். குறிப்பாக மாட்டுப்பொங்கல் அன்று வரும் சிறாவயல் ஜல்லிக்கட்டு, ஜன. 16ல் நடைபெற உள்ளது. சிறாவயல் ஜல்லிக்கட்டில் பங்கேற்க சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை…

Read More

வயநாடு தேர்தல்: பிரியங்காவை எதிர்த்து நவ்யா ஹரிதாஸ்போட்டி: பா.ஜ., அறிவிப்பு

ராகுல் ராஜினாமா செய்ததால் காலியான வயநாடு தொகுதியில் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது, காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்து உள்ளது.

Read More

காரைக்குடி; டென்ஷனான மேயரால் பரபரப்பு

காரைக்குடி: மாநகராட்சி அலுவலகத்தில் முதல் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு. அதிமுக கவுன்சிலர் ஊழல் புகார் கூற திமுக வினர் எதிர்க்க டென்ஷனான மேயர் முத்துதுரை அதிமுக கவுன்சிலரை ஒருமையில் பேசி நீ கிழிச்சதுலாம் போதும் முதல்ல வெளியே போயா என கூறியதுடன் பத்திரிக்கையாளர்களை வெளியேறச் சொல்ல அனைவரும் முகம் சுளிப்பு

Read More

காரைக்குடி-வளா் தமிழ் நூலகத்துக்கு திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி நன்கொடையாக அளித்துள்ள 1054 புத்தகங்கள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் தனது சொந்த நிதி ரூ12. 50 கோடியில் புதிதாக கட்டி வரும் வளா் தமிழ் நூலகத்துக்கு திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி நன்கொடையாக அளித்துள்ள 1054 புத்தகங்களின் பட்டியலை பெரியாா் சுயமரியாதைப் பிரச்சார அறக்கட்டளை உறுப்பினா் காரைக்குடி சாமி. திராவிடமணி ப. சிதம்பரத்திடம் சனிக்கிழமை வழங்கினாா். அப்போது காரைக்குடி தொகுதி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி உடனிருந்தாா்.

Read More

காளை மாடுகளுக்கான அழகுபோட்டி

தமிழகத்தில் முதல் முறையாக நாட்டு இன காளை மாடுகளுக்கான அழகுபோட்டி 14 நாட்டு இன காளை மாடுகள் பங்கேற்பு. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரம் செல்வ விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாட்டு இன காளை மாடுகளுக்கான அழகு போட்டி நடைபெற்றது இந்த அழகு போட்டியில் சிவகங்கை புதுக்கோட்டை ராமநாதபுரம் மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 14 நாட்டு இன காளை மாடுகள் பங்கேற்றன நாட்டுக்குட்டை, காங்கேயம், புலிக்குளம், தேனிமலைமாடு, புதுக்கோட்டை சிகப்பு, மட்டி…

Read More

பிள்ளையார் பட்டி சதுர்த்தி விழா தேரோட்டம்.

பிள்ளையார்பட்டியில் நேற்று சதுர்த்தி விழாவை முன்னிட்டு 9ம் நாள் விழாவாக தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர்.

Read More

காரைக்குடி வாரச்சந்தை-கட்டிய கடைகள் வீணா?

காரைக்குடியில் 50 ஆண்டுகளாக சந்தைபேட்டையில் திங்கள் கிழமை தோறும் இயங்கிவரும் வரச்சந்தை கொப்புடையம்மன் கோவிலுக்கு சொந்தமான் இடமாகும். அங்கு புதிதாக கடைகள் கட்ட சில ஆண்டுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது 1.5 கோடியில் கட்டப்பட்டு ரெடியான கடைகள் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல், சுமார் 400 பேர் வியாபாரம் செய்த இடத்தில் 90 கடைகள் மட்டுமே கட்டப்பட்டது ஏன்? திறப்பு விழா செய்தும் அதனை வியாபரிகள் பயன்படுத்தாமல் பழையபடி திறந்த இடத்தில் நடப்பது எதற்காக? விளக்குமா காரைக்குடி மாநகராட்சி…..

Read More

தங்கம் விலை இன்று -மதுரை- ரூ 6694

மதுரையில் தங்கத்தின் விலை தினமும் மாறுகிறது. அதுவும் ஒரு நாளுக்கு இரண்டு முறை மாறுகிறது. இன்று 22காரட் 6694 க்கும், 24 காரட் 7303 க்கும் விற்பனையாகிறது

Read More

மழை நீா்க் கால்வாய்களை தூா்வாரும் பணி

காரைக்குடி மாநகராட்சியில் மழை நீா்க் கால்வாய்களை தூா்வாரும் பணி நேற்று தொடங்கியது. காரைக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் மேயா் சே. முத்துத்துரை தூா்வாரும் பணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினா்கள் சொ. கண்ணன், காா்த்திகேயன், கலா, தெய்வானை, நாச்சம்மை, பொறியாளா் செந்தில்குமாா், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

Read More