


நிரம்பிய ஊரணி
பல ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளத்தூர் நகர சிவன் கோவில் ஊரணி நிரம்பிய காட்சி.மகிழ்ச்சியில் மக்கள்

சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகள் விரிவாக்கம்:
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகளை இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் உருவாக்குவது தொடர்பாக 5 அரசாணைகள் வெளியிடப்படுகிறது.தமிழ்நாடு…

நேரடி வரி வருவாய் மூலம் அதிக வருமானம் ஈட்டிய மாநிலங்கள்
நாடு முழுவதும் மாநிலங்களின் நேரடி வரி வருவாய் மற்றும் வருமான வரி வருவாய் குறித்து எஸ்.பி.ஐ., அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நேரடி வரி விதிப்பின் மூலம் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்டிரா 38.9 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, டில்லியைப் பின்னுக்குத் தள்ளி கர்நாடகா 2வது இடத்தை பிடித்துள்ளது.டில்லி 3வது இடத்திலும், தமிழகம் 4வது இடத்திலும், குஜராத் 5வது இடத்திலும் உள்ளது. ஒட்டுமொத்த நாட்டின் வரி வருவாயில் இந்த டாப் 5…

சர்ச்சையில் கவர்னருக்கு தொடர்பில்லை; மன்னிப்பு கோரியது பிரசார் பாரதி!
தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி விடுபட்டதில், கவர்னருக்கோ, கவர்னர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் இல்லை,” என கவர்னர் மாளிகை கூறியுள்ளது. ‘இது கவனக்குறைவால் நேரிட்ட தவறு’ என்று கூறியுள்ள பிரசார் பாரதி, அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர்கள் வெண்ணி காலாடி, குயிலி, எத்தலப்ப நாயக்கர் சிலைகளை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டத்தில், சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் படைத் தளபதி வெண்ணி காலாடிக்கும், சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலிக்கும், செய்தி மக்கள் தொடர்பு துறை வாயிலாக, 50 லட்சம் ரூபாய் செலவில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு, 2.60 கோடி ரூபாய் செலவில் சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை, தலைமை செயலகத்தில் இருந்தபடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்?
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்என் ரவி விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புதிய ஆளுநராக தமிழகத்துக்கு நன்கு பரீட்சயமான முன்னாள் மத்திய அமைச்சரான விகே சிங் நியமிக்கப்படலாம் என்று பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

கடைசி பட பூஜையில் விஜய்
எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்துடன் அவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் பயணிக்க இருப்பதால் இதுவே அவரது கடைசி படமாக பார்க்கப்படுகிறது. பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இப்படத்தில் ஹிந்தி நடிகர் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், நரைன், மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் இன்று (அக்.,4)…

2024-2025 ஆம் ஆண்டு கலைச்செம்மல் விருதுக்கான கலைஞர்கள்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் ஓவிய நுண்கலைக் குழு வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மரபுவழி கலை வல்லுநர்களுக்கும், நவீனபாணி கலை வல்லுநர்களுக்கும் நுண்கலைத் துறையில் செய்துள்ள அரும்பெரும் சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டும் வகையில் ஆண்டுக்கு 6 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருதும், தலா ரூ.1,00,000 வீதம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மரபுவழி ஓவியப் பிரிவில், ஓவியர் ஏ.மணிவேலு, மரபுவழி சிற்பப் பிரிவில் லே.பாலச்சந்தர் மற்றும் கோ.கன்னியப்பன், நவீனபாணி ஓவியப் பிரிவில் கே.முரளிதரன் மற்றும் ஏ.செல்வராஜ், நவீனபாணி…

மஹாராஷ்டிராவில் 65.1 சதவீதம் ஓட்டுப்பதிவு; 30 ஆண்டுகளில் அதிகம்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, 288 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 1995ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, நேற்று அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் 65.1 சதவீதம் ஓட்டுப் பதிவு ஆகியுள்ளது.