இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு சந்திரயான் 3 திட்ட பணிகளுக்காக உலக விண்வெளி விருது:

 இந்த ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் ஐஏஎப் உலக விண்வெளி விருது, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் மிகவும் மதிக்கப்படும், இந்த விருதை பெற்றுள்ள அவருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

Read More

அ.தி.மு.க. 17-ம் தேதி 53-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது

அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் , கழக நிறுவனத் தலைவர் `பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால்போற்றி வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்திட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமாம் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ 17.10.2024வியாழக்கிழமையன்று 53-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, 17.10.2024 முதல் 20.10.2024 வரை நான்கு நாட்கள் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 53-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்’ கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்…

Read More

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை 2 படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. தமிழ்நாடு மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்படுவது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் – நாளை பிரதமரை சந்திக்கிறார்

பள்ளிக்கல்வித்துறை, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி கேட்டு பிரதமரை சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.

Read More

விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழா நாளை நடைபெற உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறதுமாநாட்டுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மாநாட்டு பந்தல் கால்நடும் விழா நாளை நடைபெற இருக்கிறது. இதன்படி நாளை காலை 4 மணி முதல் 6 மணிக்குள் பந்தல் கால் நடப்படுகிறது. இதில் விஜய் பங்கேற்க இருக்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும், மாநாட்டுக்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி, மேடை அமைக்கும் பணிகள் தொடங்க…

Read More

சென்னை அருகே நாளை(அக்.17) புயல் சின்னம் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது; தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்துள்ளது. வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரையில் புதுச்சேரி-ஆந்திரா இடையே சென்னை அருகில் நாளை(அக்.17) கரையைக் கடக்கும்.புயல் சின்னத்தை தொடர்ந்து, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் 2 தினங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை, சில இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது

Read More

நிலநடுக்கத்தால் பாங்காங்கில் அவசரநிலை பிறப்பிப்பு

மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் தாய்லாந்தின் பாங்காங்கிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி கட்டடம் தரைமட்டமானதில் 40 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரின் வடகிழக்கு நகரமான சகாய்ங்கில் இருந்து 16 கி.மீ., தொலைவில் 10. கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. தொடர்ந்து, மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 பதிவாகியது. ஒரே சமயத்தில் அடுத்தடுத்து…

Read More

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 1200 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்பதற்காக வந்த 959 காளைகளில் மருத்துவ பரிசோதனையில் 3 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மீதமுள்ள 956 காளைகள் கோவில் காளைகள் உட்பட 1000 காளைகள் இன்று களம் கண்டன.மொத்தம் 9 சுற்றுகள் நடத்தப்பட்டது. மொத்தம் 1000 காளைகள்…

Read More

முக்கிய விளையாட்டுகள் காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது .

33-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2026-ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற உள்ளது . இந்நிலையில்செலவினத்தை குறைப்பதற்காக, 10 விளையாட்டுகள் தவிர முக்கிய விளையாட்டுகள் காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது .அதன்படி, ஆக்கி , மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல், கிரிக்கெட், டேபிள் டேன்னிஸ், ஸ்குவாஷ், பேட்மிண்டன் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளது.

Read More