பொங்கலுக்கு 10 படங்கள்

விடாமுயற்சி வெளியாகவில்லை என்றவுடன், கிட்டத்தட்ட 8 சிறிய திரைப்படங்கள், பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளன. வணங்கான், கேம்சேஞ்சர் படங்களோடு சேர்த்து, படைத்தலைவன், டென் ஹவர்ஸ், காதலிக்க நேரமில்லை, மெட்ராஸ்காரன், தருணம், 2கே கிட்ஸ், சுமோ, நேசிப்பாயா என மொத்தமாக, 10 படங்கள் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளன.

Read More

10 ஆண்டுக்கு பின் ரயில்வே சங்க தேர்தல்

கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால், 2013ம் ஆண்டுக்கு பின், தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடக்கவில்லை. அடுத்த மாதம் 4, 5, 6ம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, ரயில்வேயில் உள்ள, 17 மண்டலங்களில் பணியாற்றும், 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவை பெற, தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன.தெற்கு ரயில்வேயில், எஸ்.ஆர்.எம்.யு., எனப்படும், தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன், டி.ஆர்.இ.யு., எனப்படும் தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கம், எஸ்.ஆர்.இ.எஸ்., எனப்படும் தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட…

Read More

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

தமிழர் திருநாளாம் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதிகாலையில் எழுந்த மக்கள், நீராடி, புத்தாடை அணிந்து மகிழ்ந்தனர். பின்னர், சூரியனை வணங்கி, கரும்புகள் வைத்து, புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர். வீடுகள் முன்பு, வாசல்களில் பல வண்ண கோலமிட்டு, புத்தம் புது பானைகளில் புத்தரிசி இட்டு பொங்கலிட்டு பெண்கள் மகிழ்ந்தனர்.உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து செய்தியை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

Read More

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இச்சந்திப்பின்போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உடன் இருந்தனர். ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்தது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்,தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல்…

Read More

மருந்துகள் விலை உயர்வு ஏன்? விளக்கம் கேட்கிறது நிலைக்குழு

புதுடில்லி: கடந்த அக்டோபரில், 11 மருந்துகள் மீது 50 சதவீத விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்ததற்கு விளக்கம் அளிக்கும்படி, தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு பார்லி., நிலைக்குழு உத்தரவிட்டுள்ளது.என்.பி.பி.ஏ., எனப்படும் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம், கடந்த அக்டோர் 15ம் தேதி வெளியிட்ட உத்தரவில், 11 மருந்துகளுக்கான விலையை 50 சதவீதம் அதிகரிக்க அனுமதித்துள்ளது. பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளுக்கு ஏற்ப விலையை உயர்த்த கோரி மருந்து நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்றதாக அது…

Read More

நாட்டுக்கு வலிமை சேர்க்க கதர், கிராம பொருட்களை அதிகம் வாங்குவோம்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

காந்தியடிகளின் 156-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின்வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: கதர் ஆடைகளை அணிந்து மகிழ்வோம், நெசவாளர்களை ஆதரித்து மகிழ்வோம். தமிழகத்தில் உள்ள கதர் நூற்பாளர்கள், நெசவாளர்களின் பொருளாதார மேம்பாடு, அவர்களது நலனை கருத்தில் கொண்டு கதர் கிராம தொழில் வாரியம் மூலமாக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.கதர், கிராம பொருட்களை அதிக அளவில் வாங்கி, நாட்டுக்கு வலிமை சேர்க்க வேண்டும் என மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,…

Read More

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தமிழக அரசுக்கு கண்டனம்

விநாயகர் சிலை கரைப்புக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ள நிலையில், அதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Read More

கவர்னரை கண்டித்து நாளை போராட்டம்: தி.மு.க., அறிவிப்பு

சென்னை: கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நாளை(ஜன.7) போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க., அறிவித்துள்ளது.மாவட்ட தலைநகரங்களில் நாளை காலை 10 மணியளவில் போராட்டம் நடைபெறும். பா.ஜ., ஆட்சி இல்லாத மாநிலங்களில் கவர்னர்கள் தனி ராஜாங்கம் நடத்துகிறார்கள். இதைக் கண்டித்து நாளை போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க., தெரிவித்துள்ளது.

Read More

பத்ம விருதுகள் அறிவிப்பு

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான விருதுகளை பெறுபவர்களின் பட்டியல் குடியரசு தினத்தை ஒட்டி நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 139 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பத்ம விபூஷண் விருது 7 பேருக்கும், பத்ம பூஷண் விருது 19 பேருக்கும், பத்ம ஸ்ரீ விருது 113 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு பத்ம பூஷணும், 10 பேருக்கு பத்ம ஸ்ரீ…

Read More

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1 லட்சம் பரிசு வென்ற வீரர்!

சிவகங்கை மாவட்டம், ஆவாரங்காடு முத்துக்காளை, ரவி, மணிமாறன்பிரதர்ஸ் சார்பில் அவிழ்க்கப்பட்ட காளையை அடக்கினால் 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் 2 தங்க காசு அறிவிக்கப்பட்டது. இந்த காளையை அவனியாபுரம் ரஞ்சித் அடக்கினார் அவருக்கு பரிசுகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

Read More