50 கி.மீ தூரம் கடலில் நீந்தி சாதனை படைத்த ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன்! 

சென்னையை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரின் 12 வயது மகன் லக்சய், ஆட்டிசம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஆவார். இவர் நீச்சலில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும் நிலையில், மற்றொரு சாதனை முயற்சியாக இலங்கையின் தலைமன்னாரிலிருந்து ராமேஸ்வரம் வரை நீந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சிறுவன் லக்சய் உட்பட 28 பேர் கொண்ட குழுவினர் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னார் சென்ற நிலையில், சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தை 20 மணி நேரங்களில் நீந்தி சிறுவன்…

Read More

பா.ஜ.க. எதிர்பார்ப்பதை சீமான் செய்கிறார்- திருமாவளவன்

கூட்டணி கட்சிகளுக்கு இடையில், பிரச்னையின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெறலாம்; ஆனால் விரிசல் ஏற்படாது என, முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து விட்டார். இதை, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வழிமொழிகிறது.திராவிடம் வேறு; தமிழர் வேறு என விவாதத்தை கூர்மைப்படுத்துவது சங் பரிவார் அமைப்புக்கு துணை போவதாக அமையும். தமிழக கவர்னர் ரவி, ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் இதைத்தான் விரும்புகின்றனர்.பா.ஜ., எதை எதிர்பார்க்கிறதோ, அதைத்தான் சீமான் செய்கிறார். சீமான் விவாதிப்பதெல்லாம் அப்படித்தான் இருக்கிறது. தி.மு.க., எதிர்ப்பு என்பது வேறு, திராவிட எதிர்ப்பு என்பது…

Read More

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணிப்பு

டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு தொடங்கி நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். நவ.26, 27ம் தேதிகளில் நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் கடலூரில் அதிக மழைப்பொழிவு பதிவாக வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்படலாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

Read More

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு 3 பேருக்கு பகிரப்பட்டுள்ளது. டேவிட் பெக்கர், டெமிஸ் ஹாசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. புரதத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்புக்கான ஆராய்ச்சிக்காகவே இந்த மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஆஸ்கார் போட்டியில் 323 படங்கள் கங்குவா 10 இடத்துக்குள் வருமா?.

வரும் மார்ச் 2ஆம் தேதி 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம், சிறந்த இசை, சிறந்த இயக்குநர் போன்ற பல்வேறு பிரிவுகளில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இதில் சிறந்த படம் (Best Picture) என்ற பிரிவின் கீழ் இந்திய மொழிகளை சேர்ந்த 7 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அவை கங்குவா, ஆடு ஜீவிதம், சந்தோஷ், ஸ்வதந்திர வீர் சவார்க்கர், ஆல் வி இமேஜின்…

Read More

வயநாடு தேர்தல்: பிரியங்காவை எதிர்த்து நவ்யா ஹரிதாஸ்போட்டி: பா.ஜ., அறிவிப்பு

ராகுல் ராஜினாமா செய்ததால் காலியான வயநாடு தொகுதியில் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது, காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்து உள்ளது.

Read More

‘ஆபரேஷன் சிந்தூர்’ – இந்தியா குறிவைத்து தாக்கிய 9 இலக்குகள்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் மூலம் குறிவைத்து தகர்த்த 9 பயங்கரவாத முகாம்கள் பற்றிய தகவல்களை அரசு பகிர்ந்துள்ளது. 1.முசாஃபர்பாத்தில் உள்ள சாவய் நாலா முகாம்: இது லஷ்கர் இ தொய்பாவின் பயிற்சி முகாமாக இருந்தது. கடந்த 2024, அக்.20-ல் சோன்மார்க்கில் நடந்த தாக்குதல், 2024, அக்.24 குல்மார்க்கில் நடந்த தாக்குதல், 2025. ஏப்.22 பஹல்காமில் நடந்த தாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி…

Read More

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையிலிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். அவருக்கு பல்வேறு நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ள நிலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்பது அதில் முக்கியமானதாகும்.

Read More

இஸ்ரோ வரலாற்று சாதனை

ஸ்பேடெக்ஸ் (SpaDex) திட்டத்தின் கீழ், பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட 2 விண்கலங்களையும் இஸ்ரோ வெற்றிகரமாக இணைத்துள்ளது. இந்த இணைப்பு செயல்முறையை (Docking) வெற்றிகரமாக செய்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளதாக, இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது SDX01 (Chaser) மற்றும் SDX02 (Target) ஆகிய இரு செயற்கைக்கோள்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அவை தற்போது வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளன. இணைப்பு செயல்முறை துல்லியமாக தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோன்று…

Read More

அ.தி.மு.க. 17-ம் தேதி 53-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது

அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் , கழக நிறுவனத் தலைவர் `பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால்போற்றி வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்திட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமாம் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ 17.10.2024வியாழக்கிழமையன்று 53-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, 17.10.2024 முதல் 20.10.2024 வரை நான்கு நாட்கள் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 53-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்’ கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்…

Read More