மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான திருத்தப்பட்ட அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது

நாள் யாராருக்கு போட்டி இடம் அக்.3 வங்கதேசம் – ஸ்காட்லாந்து ஷார்ஜா அக்.3 பாகிஸ்தான் – இலங்கை ஷார்ஜா அக்.4 தென் ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் துபாய் அக்.4 இந்தியா – நியூசிலாந்து துபாய் அக்.5 வங்கதேசம் – இங்கிலாந்து ஷார்ஜா அக்.5 ஆஸ்திரேலியா – இலங்கை ஷார்ஜா அக்.6 இந்தியா – பாகிஸ்தான் துபாய் அக்.6 வெஸ்ட் இண்டீஸ் – ஸ்காட்லாந்து துபாய் அக்.7 இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா ஷார்ஜா அக்.8 ஆஸ்திரேலியா…

Read More

பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் காலமானார்

பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் காலமானார். அவருக்கு வயது 66.1958ம் ஆண்டு நவ.,13ம் தேதி பிறந்த இவர் பல்வேறு சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்களை எழுதி உள்ளார். சிலவற்றை இயக்கி உள்ளார். தென் மாநில ஹிந்து மத பாரம்பரியம் மற்றும் இதிகாசங்களை எழுதுவதில் புகழ்பெற்றவர். இவர் எழுதிய ‘ என் பெயர் ரங்கநாயகி’ என்ற நூல் தமிழ் வளர்ச்சி துறையின் 1999ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான 3ம் பரிசினை பெற்றது. ஆன்மிகம், சித்தர்கள் தொடர்பான இவரது கதைகள்…

Read More

அனுரா குமார திசநாயகே

அனுரா குமார திசநாயகே, 56, தற்போதைய பார்லிமென்டில் எம்.பி.,யாக இருக்கிறார். இவர் ஜனதா விமுக்தி பெரமுனா என்ற ஜே.வி.பி., கட்சியின் தலைவர்.இலங்கையில் தேர்தல் மூலம் ஆட்சியை கைப்பற்றும் நிலையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியான ஜே.வி.பி., தலைவர் அனுரா திசநாயகே, 51 சதவீதம் ஓட்டுகளுடன் முன்னணியில் உள்ளார்.

Read More

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 1200 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்பதற்காக வந்த 959 காளைகளில் மருத்துவ பரிசோதனையில் 3 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மீதமுள்ள 956 காளைகள் கோவில் காளைகள் உட்பட 1000 காளைகள் இன்று களம் கண்டன.மொத்தம் 9 சுற்றுகள் நடத்தப்பட்டது. மொத்தம் 1000 காளைகள்…

Read More

திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்?

திருப்பரங்குன்றம் மலையில், வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், இரு சமூகங்களின் சடங்குகளும் அமைதியான முறையில் நடைபெற்று வந்துள்ளன. அவற்றின் நோக்கம் பிற மதங்களின் புனிதத்தைக் களங்கப்படுத்துவது அல்ல. கடந்த கால நீதிமன்ற தீர்ப்புகளும் அதைத் தெளிவுபடுத்தியுள்ளன. 1920இல் மதுரையின் விசாரணை நீதிமன்றத்தில், திருப்பரங்குன்றம் தேவஸ்தானம் சார்பில் தொடரப்பட்ட ஒரு வழக்குதான் இதன் தொடக்கப்புள்ளி. 1923 ஆகஸ்ட் 23 அன்று தீர்ப்பளித்தார். பிரிட்டிஷ் அரசின் கோரிக்கையான மலையின் ஆக்கிரமிக்கப்படாத பகுதிகள் அரசாங்க சொத்து (அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள்)…

Read More

த.வெ.க.,வின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் 26 தீர்மானங்கள்.

காமராஜர், ஈ.வெ.ரா., அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரையும், கட்சியின் கொள்கைகளையும் உறுதியாக பின்பற்றுவோம். கட்சியின் கொள்கைகளுக்கு ” மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள்” என்று பெயர். ஒரேநாடு ஒரே தேர்தல் என்பதை சட்டமாக்குவதற்காக பா.ஜ., அரசுக்கு கண்டனம். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை. உண்மையான சமூக நீதியை நிலைநாட்டிட தமிழக அரசு முதலில் சாதி வாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வை காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும். மருத்துவம் போலவே கல்வியும் மாநில…

Read More

நாளை 4 மாவட்டங்களிலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை 

கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த நான்கு மாவட்டங்களிலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேசமயத்தில், காவல்துறை,தீயணைப்புத் துறை, மருத்துவம், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பத்ம விருதுகள் அறிவிப்பு

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான விருதுகளை பெறுபவர்களின் பட்டியல் குடியரசு தினத்தை ஒட்டி நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 139 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பத்ம விபூஷண் விருது 7 பேருக்கும், பத்ம பூஷண் விருது 19 பேருக்கும், பத்ம ஸ்ரீ விருது 113 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு பத்ம பூஷணும், 10 பேருக்கு பத்ம ஸ்ரீ…

Read More

கர்நாடகத்தை தொடர்ந்து குஜராத்திலும் 2 வயதுக் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு

அகமதாபாத்: கர்நாடகத்தை தொடர்ந்து குஜராத்திலும் 2 வயதுக் குழந்தைக்கு ஹியுமன் மெட்டா நிமோவைரஸ் ‘HMPV’ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தின் சந்த்கேடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 வயது பெண் குழந்தை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பெங்களூருவில் 3 மாதக் குழந்தை மற்றும் 9 மாதக் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதித்துள்ளதாக தகவல்

Read More