ரஜினி பேச்சு-அடங்காத சலசலப்பு..

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், “புதிய மாணவர்களை எளிதாக சமாளித்து விடலாம். இங்க ஏகப்பட்ட பழைய மாணவர்கள் உள்ளனர். அதுவும் சாதாரணமான பழைய மாணவர்கள் அல்ல. அசாத்தியமானவர்கள். யாரும் ஃபெயில் ஆனவர்கள் இல்ல. எல்லாரும் ரேங்க் வாங்கிட்டு கிளாஸ் விட்டு போக மாட்டேனு இங்கேயே இருப்பவர்கள் ” என்று பேசினார்…

Read More

பசும்பொன்னில் அக்.29, 30ல் நடக்கும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை

பசும்பொன்னில் அக்.29, 30ல் நடக்கும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாதொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவகலத்தில் நேற்று நடந்தது. தலைமை வகித்த கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறியதாவது.மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள பிரிவு 163(1) தடை உத்திரவின் படிபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைவிழாவிற்கு வாடகை வாகனங்கள் மற்றும் டூவீலர்கள், டிராக்டர், ஆட்டோ, சரக்கு வாகனம் ஆகியதிறந்த வெளிவாகனங்களில் வந்து கலந்து கொள்ள அனுமதி இல்லை. சொந்த நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி.,…

Read More

கவர்னர் தமது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறினார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் இன்று(ஜன.6) காலை 9.30க்கு தொடங்கியது. இதில் கலந்து கொள்ள தலைமைச் செயலகம் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் இருவருக்கும் உரிய மரியாதை தரப்பட்டது. பின்னர் சபாநாயகர் அப்பாவு, கவர்னரை சட்டசபைக்குள் அழைத்துச் சென்றார். முதல் நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதையடுத்து, கவர்னர் தேசிய கீதம் பாட வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தெரிகிறது. அதை ஏற்க மறுத்ததால் கவர்னர் தமது உரையை வாசிக்காமல் அவையை விட்டு…

Read More

ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!!

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் சாலை மறியல் போராட்டத்துக்கு தடை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து பரிசீலிக்க 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் எந்தவித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது

Read More

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் ரூ.20 அபராதம் விதிக்கும் நடைமுறை அமல்..!!

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் ரூ.20 அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கொடைக்கானல் மலை பகுதி முழுவதுமாகவே பிளாஸ்டிக் பாட்டில்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே முழுமையாகவே தடை செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை முழுமையாக அமல்படுத்தாத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது.இந்த உத்தரவின் அடைப்படையில் கொடைக்கானல் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நெகிழி பாட்டில்கள் வைத்திருந்தால் அவர்களது பாட்டில்களை பறிமுதல் செய்து…

Read More

சிறு வணிகர்களின் கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிப்பதா? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள் கடை வாடகை தொகையில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரியை இனி ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 23-ந் தேதி கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு மிக மோசடியானது மட்டுமின்றி, வாடகை இடத்தில் வாணிபம் செய்யும் ஏழை, நடுத்தர வணிகர்கள் மீது தொடுத்துள்ள மோசமான தாக்குதலகும். கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக…

Read More

ஜம்மு-காஷ்மீா்: இன்று இரண்டாம் கட்டத் தோ்தல்

ஜம்மு – காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை (செப்.25) தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் 239 வேட்பாளா்கள் போட்டியிடவுள்ள நிலையில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வாக்களிக்கவுள்ளனா்.மூன்றாம் மற்றும் இறுதிகட்ட தோ்தல் அக்டோபா் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்பிறகு, அக்டோபா் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது.

Read More

ஹரியானா முதல்வராக பா.ஜ.,வின் நயாப் சைனி இன்று பதவியேற்கிறார்.

ஹரியானா முதல்வராக நயாப் சைனி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கிறார். அவருக்கு கவர்னர் பண்டாரு தாத்தரேயா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Read More

விஜயதசமி | தமிழகம் முழுவதும் நாளை அரசுப்பள்ளிகள் செயல்படும்!

விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை அரசுப்பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நவராத்திரியின் நிறைவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கல்வியை தொடங்கும் வகையில், குழந்தைகளை முதல் முறையாக பள்ளியில் சேர்ப்பார்கள்.ஆகவே நாளைய தினம் அரசுப் பள்ளிகள் செயல்பட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மாணவர் சேர்க்கைக்காக அரசுப் பள்ளிகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிப்பதே குறிக்கோள்; த.வெ.க.

2026 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க.,வுடன் த.வெ.க., கூட்டணி என்று வெளியாகி வரும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது. த.வெ.க.,வின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. மக்களின் பேராதரவோடு பெரும்பான்மையுடன் வென்று தமிழக மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Read More