‘ஜனநாயகன்’- விஜய்

 விஜயின் 69வது படமான ‘ஜனநாயகன்’ போஸ்டர் வெளியீடு. குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்தப் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் அவரது கடைசி படமான தளபதி 69 படத்தின் பெயர் ‘ஜனநாயகன்’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு. கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்எச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பிரியாமணி, கௌதம் மேனன், நரேன், மமிதா பைஜூ ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத்…

Read More

ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம்

ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஏலம் நடைபெறுகிறது. 1,574வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில் 577 வீரர்கள் இறுதியாக ஏலத்தில் இடம்பெற உள்ளனர். ஐ.பி.எல். வீரர்கள் ஏலம்இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஏல நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யபடுகிறது.

Read More

காளை மாடுகளுக்கான அழகுபோட்டி

தமிழகத்தில் முதல் முறையாக நாட்டு இன காளை மாடுகளுக்கான அழகுபோட்டி 14 நாட்டு இன காளை மாடுகள் பங்கேற்பு. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரம் செல்வ விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாட்டு இன காளை மாடுகளுக்கான அழகு போட்டி நடைபெற்றது இந்த அழகு போட்டியில் சிவகங்கை புதுக்கோட்டை ராமநாதபுரம் மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 14 நாட்டு இன காளை மாடுகள் பங்கேற்றன நாட்டுக்குட்டை, காங்கேயம், புலிக்குளம், தேனிமலைமாடு, புதுக்கோட்டை சிகப்பு, மட்டி…

Read More

பாரா ஒலிம்பிக் 4 நாள் மேலும் இரண்டு பதக்கங்கள்.

பாரிஸ் 2024 பாராலிம்பிக்ஸ், செப்டம்பர் 1 ஆம் நாள் 4 ஆம் நாள், நிஷாத் குமார் உயரம் தாண்டுதல் வெள்ளி வென்றார், பேட்மிண்டனில் 3 பதக்கங்கள் உறுதி ஆடவர் உயரம் தாண்டுதல் T47 போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த நிஷாத், 2.04 மீ. தனது சீசனில் சிறந்த முயற்சியைப் பதிவு செய்தார். முன்னதாக, பெண்களுக்கான 200 மீட்டர் டி35 இறுதிப் போட்டியில் ப்ரீத்தி…

Read More

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையிலிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். அவருக்கு பல்வேறு நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ள நிலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்பது அதில் முக்கியமானதாகும்.

Read More

அவசர கால உதவி எண்களை அறிவித்துள்ளது அரசு. மழை குறித்து வதந்திகளை பரப்பக்கூடாது: அரசு அறிவுரை

அரசு நிர்வாகத்தை பொறுத்தவரை மழையை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளோம்; அனைத்து துறைகளும் தயாராக உள்ளன. வசிப்பது தாழ்வான பகுதி எனில், அரசு முகாம் உட்பட பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும்அரசு வெளியிடும் முன்னெச்சரிக்கை, அறிவுரையை பின்பற்ற வேண்டும் கனமழை அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பை அடுத்து சென்னை மாநகராட்சி அவசர கால உதவி எண்களை அறிவித்துள்ளது.1913,044-2561 9207,044-2561 9204,044-2561 9206,89911 24176,89911 24175, தாம்பரம் மாநகராட்சி உதவி எண்கள் 18004254355,18004251600,வாட்ஸ்…

Read More

விநாயகர் சிலைகள்,ஊர்வலம்-கட்டுப்பாடு

சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், சிலைகள் வைப்பதற்கான இடங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக போலீசார் இந்து அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் பல்ேவறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி போலீசார் சென்னை உயர்…

Read More

சென்னையில் கார் ரேஸ்

சென்னையில் ஃபார்முலா-4 ரேசிங் ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் இன்று (ஆக.31) மற்றும் நாளை (செப்.1) இரவு நடைபெறுகிறது. இதற்காக தீவுத்திடலைச் சுற்றி 3.5 கி.மீ., தொலைவுக்கு பிரத்யேக பந்தய தனம் அமைக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் பகுதியில் 8000 ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகள், மின் விளக்குகள், இரும்பு தடுப்புகள் போன்ற அனைத்து ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இரவு 7.10 முதல் 8:45 மணி வரை பல்வேறு பிரிவுகளுக்கான தகுதிச் சுற்றுகள் நடைபெற உள்ளன.

Read More

விஜயதசமி | தமிழகம் முழுவதும் நாளை அரசுப்பள்ளிகள் செயல்படும்!

விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை அரசுப்பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நவராத்திரியின் நிறைவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கல்வியை தொடங்கும் வகையில், குழந்தைகளை முதல் முறையாக பள்ளியில் சேர்ப்பார்கள்.ஆகவே நாளைய தினம் அரசுப் பள்ளிகள் செயல்பட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மாணவர் சேர்க்கைக்காக அரசுப் பள்ளிகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

போன், இ-மெயில் என்றிருந்த நிலையில் தற்போது சமூக ஊடகம் மூலம் 6 நாளில் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கடும் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு முடிவு

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் முன்பெல்லாம் கட்டுப்பாட்டு அறை, இ-மெயிலில் மிரட்டல்களை விடுத்து வந்தனர். தற்போது அவர்கள் சில சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கின்றனர். வெடிகுண்டு மிரட்டலால் டிக்கெட் வாங்கி விமானத்தில் பயணம் செய்பவர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல் விவரிக்க முடியாதது. பெரும்பாலும், புறப்பட்ட பிறகு ெவடிகுண்டு மிரட்டல் செய்தி வருவதால், மீண்டும் விமான நிலையம் திரும்புவதா? அல்லது வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடுவதா? என்ற குழப்பங்களும் நடக்கிறது. அதனால் பாதுகாப்பு ஏஜென்சிகள்…

Read More