வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பணிகளை மண்டல வாரியாக ஒருங்கிணைத்து துரிதப்படுத்த 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம். வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்த நிலையில் உத்தரவு பிறப்பித்துள்ளார்

Read More

ரஜினி பேச்சு-அடங்காத சலசலப்பு..

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், “புதிய மாணவர்களை எளிதாக சமாளித்து விடலாம். இங்க ஏகப்பட்ட பழைய மாணவர்கள் உள்ளனர். அதுவும் சாதாரணமான பழைய மாணவர்கள் அல்ல. அசாத்தியமானவர்கள். யாரும் ஃபெயில் ஆனவர்கள் இல்ல. எல்லாரும் ரேங்க் வாங்கிட்டு கிளாஸ் விட்டு போக மாட்டேனு இங்கேயே இருப்பவர்கள் ” என்று பேசினார்…

Read More

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024: அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்

இந்தியாவின் கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் கடைசி மற்றும் 7-வது சுற்றில் முதல் போர்டில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஈரானின் அமீன் தபதாபேயியுடன் மோதினார். இந்த ஆட்டம் 15-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 2-வது போர்டில் செர்பியாவின் அலெக்ஸி…

Read More

அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்.

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று (23) பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

Read More

கோர்ட் தீர்ப்பு எதிரொலி-பழைய பள்ளி கட்டடங்களை உடனே இடிக்க அரசு உத்தரவு

சென்னை: பயன்பாடில்லாத பழைய பள்ளி கட்டடங்களை இடிக்க, பள்ளி மேலாண்மை குழுவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித் துறை செயலர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.

Read More

பாரா ஒலிம்பிக் ஷீத்தல் தேவி அசத்தல்

இந்திய வில்வித்தை வீராங்கனையான ஷீத்தல் தேவி உலக சாதனையை ஜஸ்ட் மிஸ்ஸில் தவறவிட்டுள்ளார். மகளிருக்கான வில்வித்தை போட்டியில் ரேங்கிங் சுற்றுகள் நடத்தப்பட்டன. இந்த ரேங்கிங் சுற்று மூலமாக அணிகள் பிரிக்கப்படும். இதில் 17 வயதாகும் இந்திய வீராங்கனையான ஷூத்தல் தேவி 703 புள்ளிகள் பெற்று அசத்தியுள்ளார்.704 தான் உலக சாதனை.

Read More

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிப்பதே குறிக்கோள்; த.வெ.க.

2026 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க.,வுடன் த.வெ.க., கூட்டணி என்று வெளியாகி வரும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது. த.வெ.க.,வின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. மக்களின் பேராதரவோடு பெரும்பான்மையுடன் வென்று தமிழக மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஹரியானா தேர்தல் : மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி..!

ஜூலானா சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளரும், ஒலிம்பிக் வீராங்கனையுமான வினேஷ் போகத் காலை முதல் முன்னிலை பெற்று வந்தார். அதன்பின், சிறுது நேரம் பின்னடைவை சந்தித்த அவர் அதன்பிறகு மீண்டும் முன்னிலைப் பெற்று வந்தார். இந்த நிலையில், தற்போது காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் 6,000-திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை வீழ்த்தி வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.

Read More

வடகிழக்குப் பருவமழை நவ.12ம் தேதி முதல் சூடுபிடிக்கும்: பிரதீப் ஜான் கணிப்பு!

சென்னை: வடகிழக்குப் பருவமழை நவ. 12ம் தேதி முதல் சூடுபிடிக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். ‘தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகலாம். இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், இன்று முதல், 15ம் தேதி வரை கனமழை கொட்ட துவங்கும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Read More

மஹாராஷ்டிராவில் 65.1 சதவீதம் ஓட்டுப்பதிவு; 30 ஆண்டுகளில் அதிகம்!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, 288 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 1995ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, நேற்று அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் 65.1 சதவீதம் ஓட்டுப் பதிவு ஆகியுள்ளது.

Read More