போகிப் பண்டிகை கொண்டாட்டம் : புகை மூட்டம், பனிமூட்டம் காரணமாக சென்னையில் 30 விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு!

 போகிப் பண்டிகையால் ஏற்பட்ட புகை மூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் 30 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு வர வேண்டிய, புறப்பட வேண்டிய 30 விமானங்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டன. டெல்லி, பெங்களூருவில் இருந்து சென்னை வர வேண்டிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் ஓடு பாதையே தெரியாத அளவுக்கு புகை மூட்டம் காணப்படுவதால் விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது

Read More

சுசீலா மேத்தாவுக்கு கலை வித்தகர் விருது

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட முதல்-அமைச்சர் 11.07.2024 அன்று உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, திரையுலகில் 20,000க்கும் மேற்பட்ட பலமொழிப் பாடல்களைப் பாடியவரும், “தென்னிந்தியாவின் இசைக்குயில்” என்றும், “மெல்லிசை அரசி” என்றும் பாராட்டப்படதிரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கும், தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான…

Read More

கோர்ட் தீர்ப்பு எதிரொலி-பழைய பள்ளி கட்டடங்களை உடனே இடிக்க அரசு உத்தரவு

சென்னை: பயன்பாடில்லாத பழைய பள்ளி கட்டடங்களை இடிக்க, பள்ளி மேலாண்மை குழுவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித் துறை செயலர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.

Read More

கூட்டணி ஆட்சிக்கு தயார்! அறிவித்தார் விஜய் இது திருமாவளவனை குறிவைத்தா?

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்தால் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தரப்படும் என்று நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

Read More

நாளை இரவு சென்னையில் 23 மேம்பாலங்கள் மூடல்!

சென்னை: ஆங்கிலப்புத்தாண்டு முன்னிட்டு, சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டிச.,31 இரவு 10 மணி முதல் ஜன.,1 காலை 6 மணி வரை மேம்பாலங்கள் மூடப்படும் என்றும் சென்னை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். கடற்களை உட்புற சாலை டிச.,31 அன்று இரவு 7 மணி முதல் ஜன.,1 காலை 6 மணி போக்குவரத்துக்கு மூடப்படும். உட்புற சாலையில் நாளை இரவு 7 மணி முதல் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே…

Read More

உக்கடம் குளத்தில் ‘மிதக்கும்’ சோலார்

கோவை : உக்கடம் பெரிய குளத்தில், 50 சென்ட் நீர் பரப்பில், 1.45 கோடி ரூபாயில் ‘மிதக்கும் சோலார்’ அமைக்கப்படுகிறது. நாளொன்றுக்கு, 693 யூனிட் மின்னுற்பத்தி கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளது.’நமக்கு நாமே’ திட்டத்தில், காய்கறி கழிவில் காஸ் தயாரிக்கும் திட்டத்துக்கு, சுவிட்சர்லாந்து துாதரகம், ஏற்கனவே நிதி வழங்கி, கோவை பாரதி பார்க் வளாகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதே போல உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் அமைக்க நிதி ஒதுக்கியது.அதில், 1.45 கோடி ரூபாயில், மிதக்கும் சோலார் மின்னுற்பத்தி நிலையம்…

Read More

பாரா ஒலிம்பிக் 2024 கபில் பார்மர் வெண்கலம் வென்றார்.

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024 8 ஆம் நாள் நேற்று: கபில் பர்மர் இந்தியாவின் 25 வது பதக்கத்திற்காக ஜெ1 ஜூடோ வில் வெண்கல பதக்கத்தை வென்றார்.

Read More

எங்களுக்கும் தி.மு.க.,வுக்கும் தான் போட்டி: பொதுக்குழுவில் விஜய் பேச்சு.

இதுவரை தமிழகம் காணாத ஒரு தேர்தலை அடுத்தாண்டில் தமிழகம் காணப் போகிறது. இரண்டே இரண்டு பேருக்கு இடையில் தான் போட்டி. த.வெ.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் தான் தேர்தலில் போட்டி நிலவும்,” என்று கட்சி பொதுக்குழுவில் நடிகர் விஜய் பேசினார். சட்டம் ஒழுங்கு என்று ஒன்னு இருக்கிறதாகவே தெரியவில்லை. அது எல்லாம் இந்த கரப்ஷன், கபடதாரிகள் கவர்மென்ட் தான் காரணம். இந்த நிலைமை மாற வேண்டும்.மன்னராட்சி முதல்வர் அவர்களே, உங்க ஆட்சியை பற்றி கேள்வி கேட்டால் மட்டும் ஏன் சார்…

Read More

பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு

2024 ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிவியலுக்கான Sveriges Riksbank பரிசு, ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு என அழைக்கப்படும், MIT இன் டாரன் அசெமோக்லு மற்றும் சைமன் ஜான்சன் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் ராபின்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Read More

நாய் வளர்ப்பு கொள்கை – அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் நாய்களை வளர்ப்பதற்கு புதிய கொள்கைகளை (Tamil Nadu State Dog Breeding Policy) வகுத்து கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி அரசாணை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு வெளியிட்ட நாய் வளர்ப்புக் கொள்கையைப் பின்பற்றி இவை வடிவமைக்கப்பட்டதாக, மாநில அரசின் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அதன்படி, ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, கட்டை, ராமநாதபுரம் மண்டை நாய், மலைப்பட்டி, செங்கோட்டை நாய் ஆகியவற்றுக்கு நாட்டு நாய் என்ற…

Read More