
ரூ.6,000 கோடி மோசடி நியோமேக்ஸ் வழக்கு
நியோமேக்ஸ் நிறுவன சொத்து களை முடக்குவதற்கான அரசாணை வெளியிடாவிட்டால், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் என ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் இருந்து பெற்ற முதலீட்டுத்தொகை ரூ.6 ஆயிரம் கோடி வரை வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதனால், இந்நிறுவனத்தின் இயக்குனர்கள், ஏஜென்ட்கள் உள்ளிட்ட பலர் கைதாயினர். இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களும், இதற்கு ஆட்சேபம் தெரிவித்தும் சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர்….