ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று (அக்., 05) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. 2 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, காங்கிரஸ் கட்சியின் பூபிந்தர் சிங் மற்றும் 101 பெண்கள் உட்பட 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பதிவாகும் வாக்குகள் வரும் அக்., 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Read More

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் அக்.24 வரை நடைபெற உள்ளன.

Read More

அ.தி.மு.க. 17-ம் தேதி 53-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது

அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் , கழக நிறுவனத் தலைவர் `பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால்போற்றி வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்திட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமாம் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ 17.10.2024வியாழக்கிழமையன்று 53-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, 17.10.2024 முதல் 20.10.2024 வரை நான்கு நாட்கள் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 53-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்’ கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்…

Read More

பாஸ்போர்ட் சேவை இணையதளம் 4 நாட்கள் இயங்காது

பாஸ்போர்ட் சேவை இணையதளம் இன்று இரவு 8 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை இயங்காது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், ஆவண சரிபார்ப்பு நேர்க்காணலுக்கு முன்பதிவு செய்திருந்த அனைவரும் நேரமுள்ள பிற நாள்களில் மாற்றி அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

சுசீலா மேத்தாவுக்கு கலை வித்தகர் விருது

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட முதல்-அமைச்சர் 11.07.2024 அன்று உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, திரையுலகில் 20,000க்கும் மேற்பட்ட பலமொழிப் பாடல்களைப் பாடியவரும், “தென்னிந்தியாவின் இசைக்குயில்” என்றும், “மெல்லிசை அரசி” என்றும் பாராட்டப்படதிரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கும், தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான…

Read More

கடைசி பட பூஜையில் விஜய்

எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்துடன் அவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் பயணிக்க இருப்பதால் இதுவே அவரது கடைசி படமாக பார்க்கப்படுகிறது. பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இப்படத்தில் ஹிந்தி நடிகர் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், நரைன், மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் இன்று (அக்.,4)…

Read More

தமிழ்நாட்டில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம்- லியூ டேவிட், செங்கல்பட்டு- சிவசங்கர், கள்ளக்குறிச்சி- பவானி, ஈரோடு- ரவிக்குமார், கன்னியாகுமரி- ராம லட்சுமி, திருச்சி- குமரவேல், மதுரை- அருள் சுந்தரேஷ் குமார், ராமநாதபுரம்- அமுதா ராணி, சேலம்- தேவி மீனாள், புதுக்கோட்டை- கலைவாணி, தேனி- சித்ரா, கரூர்- லோகநாயகி, விருதுநகர்- ஜெயசிங், வேலூர்- ரோகிணி தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

Read More

2024-2025 ஆம் ஆண்டு கலைச்செம்மல் விருதுக்கான கலைஞர்கள்.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் ஓவிய நுண்கலைக் குழு வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மரபுவழி கலை வல்லுநர்களுக்கும், நவீனபாணி கலை வல்லுநர்களுக்கும் நுண்கலைத் துறையில் செய்துள்ள அரும்பெரும் சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டும் வகையில் ஆண்டுக்கு 6 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருதும், தலா ரூ.1,00,000 வீதம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மரபுவழி ஓவியப் பிரிவில், ஓவியர் ஏ.மணிவேலு, மரபுவழி சிற்பப் பிரிவில் லே.பாலச்சந்தர் மற்றும் கோ.கன்னியப்பன், நவீனபாணி ஓவியப் பிரிவில் கே.முரளிதரன் மற்றும் ஏ.செல்வராஜ், நவீனபாணி…

Read More

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரை ஒப்புதல்அளித்துள்ளது.

Read More

நலம் தரும் நவராத்திரி வழிபாடு

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகையை ஒன்பது விதமான வடிவங்களில் வழிபடுவது வழக்கம். இதில் முதல் மூன்று நாட்கள் அம்பிகையை ஆதிசக்தியாகவும், அடுத்த மூன்று நாட்கள் அம்பிகையை செல்வங்களை அருளும் மகாலட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் கலைகளையும், ஞானத்தையும் அருளக் கூடிய கலைமகளின் வடிவமாகவும் வழிபடுகிறோம். இதில் அம்பிகை, அசுரனை வதம் செய்வதற்கு முன் பல்வேறு தெய்வங்களிடம் இருந்து பெற்ற ஆயுதங்களை வைத்து பூஜை செய்த நாளையே ஆயுத பூஜையாக, நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் கொண்டாடுகிறோம். அம்பிகை,…

Read More