ஆன்லைன் மோசடி; மக்களே உஷாராக இருங்க; பிரதமர் மோடி எச்சரிக்கை

மன்கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது ஆன்லைன் மோசடியில் மக்கள் உஷாராக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தை சமாளிக்க மாநில அரசுகளுடன் புலனாய்வு அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. எந்த புலனாய்வு அமைப்பும், இது போன்ற விசாரணைக்காக உங்களை தொலைபேசியில் அழைக்காது. வீடியோ அழைப்பும் போலீசாரிடம் இருந்து வராது. டிஜிட்டல் அரெஸ்ட் என்று எதுவுமே கிடையாது. அப்படி யாரேனும் போனில் அழைத்தால் அது மோசடி என்று புரிந்து கொள்ள வேண்டும்.அத்தகைய சைபர் கிரைம் குற்றங்களை தெரிவிக்க…

Read More

சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய்

கடந்த செப்., 27ல் நடந்த த.வெ.க., முதல் மாநில மாநாட்டில் பேசிய விஜய், ‘திராவிடமும், தமிழ் தேசியமும் எங்களது கட்சி கொள்கையாக இருக்கும்’ என்றார். அது மட்டுமின்றி, ‘ஆ ஊ என்று சத்தமா கோபமா பேசி விட்டால் போதுமா’ என்றும் கிண்டல் தொனியில் விஜய் பேசியிருந்தார். சீமானை மட்டம் தட்டும் வகையில் விஜய் பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன.இதையடுத்து விஜய் பற்றி சீமான் தாறுமாறாக விமர்சனம் செய்தார். சீமான் கூறியதாவது: ‘திராவிடமும் தமிழ் தேசியமும் வேறு வேறு. விஜய் கொள்கை…

Read More

பாரா ஒலிம்பிக்-தங்கம்,வெண்கலம் வென்ற இந்தியர்கள்

இந்திய வீராங்கனை அவனி லேகரா 249.7 புள்ளிகள்(ஓலிம்பிக் ரெகார்ட்) பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். தென் கொரியா வீராங்கனை லீ யுன்ரி 246.8 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் மற்றும் இந்திய வீராங்கனை மோனா அகர்வால் 228.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றனர்.

Read More

12 மாவட்டங்களில் 46,931 வேலை வாய்ப்புகள்.! மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு.! 

அமைச்சரவைக் கூட்டத்தில், மின்னணுப் பொருட்கள், பாதுகாப்பு, மருத்துவம், தோல் அல்லாத காலணிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின் வாகனங்கள், தொலைத்தொடர்பு எனப் பல்வேறு துறைகளில் பரவலாக 12 மாவட்டங்களில், 46,931 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.38,698.8 கோடி மதிப்பிலான 14 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.என அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Read More

எங்களுக்கும் தி.மு.க.,வுக்கும் தான் போட்டி: பொதுக்குழுவில் விஜய் பேச்சு.

இதுவரை தமிழகம் காணாத ஒரு தேர்தலை அடுத்தாண்டில் தமிழகம் காணப் போகிறது. இரண்டே இரண்டு பேருக்கு இடையில் தான் போட்டி. த.வெ.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் தான் தேர்தலில் போட்டி நிலவும்,” என்று கட்சி பொதுக்குழுவில் நடிகர் விஜய் பேசினார். சட்டம் ஒழுங்கு என்று ஒன்னு இருக்கிறதாகவே தெரியவில்லை. அது எல்லாம் இந்த கரப்ஷன், கபடதாரிகள் கவர்மென்ட் தான் காரணம். இந்த நிலைமை மாற வேண்டும்.மன்னராட்சி முதல்வர் அவர்களே, உங்க ஆட்சியை பற்றி கேள்வி கேட்டால் மட்டும் ஏன் சார்…

Read More

எலான் மஸ்க் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்க வேண்டாம் என முடிவு

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லாவின் இந்த முடிவு, இந்திய சந்தையில் எலகட்ரிக் கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தாலும், இப்பிரிவை மேம்படுத்துவதற்கு மற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது மொத்த கார் விற்பனையில் எலக்ட்ரிக் வாகனங்கள் 3% மட்டுமே என்றாலும், 2030-ஆம் ஆண்டுக்குள் இது 30% ஆக உயர்த்துவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த வளர்ச்சி, உலகளாவிய வாகன உற்பத்தியாளர்களுக்கு இந்தியா ஒரு…

Read More

ஹரியானா முதல்வராக பா.ஜ.,வின் நயாப் சைனி இன்று பதவியேற்கிறார்.

ஹரியானா முதல்வராக நயாப் சைனி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கிறார். அவருக்கு கவர்னர் பண்டாரு தாத்தரேயா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Read More

திருப்பதியில் கூட்ட நெரிசல்; 6 பேர் பலி

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவத்திற்கு தேவஸ்தானம் மன்னிப்பு கோரியது. ஒரே கவுன்டரில் 5,000க்கும் மேற்பட்டோர் திரண்டது எதிர்பாராதது என விளக்கம் அளித்துள்ளது.ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்புடன் வைகுண்ட ஏகாதசி தரிசனம் துவங்குகிறது. வரும் 19ம் தேதி வரை வைகுண்ட துவாரம், பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட…

Read More

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்

ஆன்லைன் மோசடிகளை தடுக்க செயலற்ற வங்கிக்கணக்குகள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேலாக பணப் பரிமாற்றம் நடக்காத வங்கிக் கணக்குகள், நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

Read More

தமிழகத்துக்கு மத்திய அரசு செய்த அநீதி

சென்னை: தமிழகத்துக்கு மத்திய அரசு செய்து வரும் அநீதிக்கு எல்லையே இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ள PM SHRI திட்டத்தில் இணைய தமிழ்நாடு அரசு மறுத்ததால் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு மாற்றிவிட்டதாக வெளியான செய்தியை டேக் செய்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டுக்கு எதிரான ஒன்றிய பா.ஜ.க. அரசின் அட்டூழிய மனப்பான்மைக்கு அளவே இல்லாமல்…

Read More