பாரா ஒலிம்பிக் 2024-நேற்று மேலும் 5 பதக்கங்கள்

ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் T63 போட்டியில் சரத்குமார் வெள்ளிப்பதக்கமும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலமும் வென்றனர். மறுபுறம், F46 ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் அஜீத் சிங் மற்றும் சுந்தர் சிங் குர்ஜார் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர். 400 மீட்டர் டி20 போட்டியில் தீப்தி ஜீவன்ஜி வெண்கலம் வென்றார்.

Read More

உலக கோப்பை கேரம் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த காஷிமா மூன்று பதக்கங்கள் வென்று சாதனை 

அமெரிக்காவில் நடந்த, 6வது உலக கோப்பை கேரம் போட்டியில், சென்னையை சேர்ந்த, நம் தமிழ் மகள், காஷிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்கு பாராட்டுக்கள். பெருமை கொள்கிறேன் மகளே. எளியோரின் வெற்றியில் தான் அரசின் வெற்றி அடங்கி இருக்கிறது.முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து. இவர், புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள். தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு போட்டி என மூன்று பிரிவுகளிலும், இவர் வெற்றி பெற்றுள்ளர். இவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Read More

கெஜ்ரிவால் இன்று ராஜினாமா?

மதுபான ஊழல் வழக்கில், ஜாமினில் வெளியே வந்துள்ள கெஜ்ரிவாலுக்கு, முதல்வர் அலுவலகத்திற்கு போக கூடாது. பைல்களில் கையெழுத்து போடக் கூடாது என பல்வேறு உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது. பயனற்றதாகி விட்ட முதல்வர் பதவியை, கெஜ்ரிவால் இன்று (செப்டம்பர் 17) ராஜினாமா செய்ய உள்ளார்.

Read More

அரசு ஊழியர்கள் சங்கத்தின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை குறித்து சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Read More

விஜய்யின் கற்பனை அதீதமாக உள்ளது நிருபர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி

விஜய் வழங்கிய முன்மொழிவுகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு கட்சிகளால் முன்மொழியப்பட்டவை. புதிதாக அவர் எதையும் சொல்லவில்லை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என சொல்லும் அதேவேளையில், மதத்தின் பெயரால் நடக்கும் பிளவுவாதத்தை எதிர்ப்போம்’ என சொல்கின்ற அதே உரையில் பாசிசத்தை எதிர்ப்பவர்கள் நையாண்டிக்கு உரியவர்கள், கேலிக்குரியவர்கள் என்ற வகையில் பேசி உள்ளார். அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா என கேட்டுள்ளார். இந்த இரண்டுக்கும் என்ன பொருத்தம் என தெரியவில்லை. அது நக்கல், நையாண்டி தொனியோடு வெளிப்பட்டு உள்ளது….

Read More

ஆசிரியர் தின வாழ்த்து

சென்னை: ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள். அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு வாழ்த்துகள்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

Read More

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணிப்பு

டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு தொடங்கி நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். நவ.26, 27ம் தேதிகளில் நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் கடலூரில் அதிக மழைப்பொழிவு பதிவாக வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்படலாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

Read More

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி. நாளை முடிவு

புதுடெல்லி: ரூ.2000க்கு மேல் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18சதவீத ஜிஎஸ்டி விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூ.2,000க்கு மேல் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ள 54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Read More

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களை வீணாக்கிய 20 மாணவர்கள்; மருத்துவப்படிப்பில் சேர தடை!

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இடங்களை தேர்வு செய்து கல்லூரியில் சேராவிட்டால் நீட் தேர்வை ஓராண்டு எழுத தடை விதித்தும், மருத்துவப்படிப்பில் சேர ஓராண்டு தடை விதித்தும் தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்தது.

Read More

அதிக வருமான வரி செலுத்தும் பிரபலங்கள் முதலிடத்தில் ஷாருக்கான், 2ஆம் இடத்தில் விஜய்

கடந்த நிதியாண்டில் அதிக வரி செலுத்திய இந்திய பிடபலங்களில் ஷாருக்கான் 92 கோடி செலுத்தி முதலிடத்திலும் நடிகர் விஜய் 80 கோடி செலுத்தி இரண்டாமிடத்திலும் உள்ளதாக பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ளது.

Read More